புதிய ரயில் அட்டவணை வெளியீடு: 260-க்கும் மேற்பட்ட ரயில்களின் வேகம் அதிகரிப்பு!

சரக்கு ரெயில்களின் வேகம் 2 மடங்காகவும், பயணிகள் ரெயில்கள் 25 கி.மீ. வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: July 2, 2019, 8:58 AM IST
புதிய ரயில் அட்டவணை வெளியீடு: 260-க்கும் மேற்பட்ட ரயில்களின் வேகம் அதிகரிப்பு!
இந்திய ரயில்வே
Web Desk | news18
Updated: July 2, 2019, 8:58 AM IST
இந்திய ரயில்வே சார்பில் புதிய ரயில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 260-க்கும் மேற்பட்ட ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் புதிய ரயில் அட்டவணையை ரயில்வே அமைச்சகம் வெளியிடும். அதன்படி இந்த ஆண்டுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு ரெயில்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் 17 மண்டலங்களில் 260-க்கும் மேற்பட்ட ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சரக்கு ரெயில்களின் வேகம் 2 மடங்காகவும், பயணிகள் ரெயில்கள் 25 கி.மீ. வேகமும் 5 ஆண்டுகளுக்குள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டிருப்பதால் ரயில்கள் புறப்படும் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, எழும்பூர்-குருவாயூர் விரைவு ரயில் தினசரி காலை 8.25 மணிக்கு புறப்படும்.

எழும்பூர்-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் 8.10 மணிக்கும், எழும்பூர்-நெல்லை ரயில் தினசரி இரவு 7.50 மணிக்கும், எழும்பூர்-தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ், இரவு 10.55 மணிக்கும், எழும்பூர்-சேலம் விரைவு தினசரி இரவு 10.45 மணிக்கு புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... போதையில் ரகளை செய்த இந்து முன்னணி முன்னாள் நிர்வாகி சுரேஷ் கைது

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...