Home /News /national /

ரயிலுக்கு தீ வைப்பு: வன்முறையை தூண்டிவிட்டதாக பிரபல யூடியூபர் மீது வழக்கு!!

ரயிலுக்கு தீ வைப்பு: வன்முறையை தூண்டிவிட்டதாக பிரபல யூடியூபர் மீது வழக்கு!!

Train Torched

Train Torched

பாட்னாவில் வன்முறையை தூண்டிவிட்டதாக போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வரும் கான் சார் மீது குற்றச்சாட்டு எழுந்தது

    ரயில்வே வாரியத்தின் தேர்வுமுறைக்கு எதிராக தேர்வர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வன்முறையை தூண்டிவிட்டதாக பிரபல யூடியூபர் கான் சார் மற்றும் 400க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    ரயில்வே வாரியமானது, ரயில்வே மண்டலங்களில் காலியாக உள்ள நிலைய மேலாளர், ஜூனியர் கிளார்க், ரயில் உதவியாளர் போன்ற பல்வேறு பிரிவுகளில் தொழில்நுட்பம் சாராத 35,000 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பின்னர் இந்த தேர்வு 2020 மார்ச் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கொரோனா காரணமாக அந்த தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

    ரயில்வே தேர்வு பிரச்னை:

    35,000 பணியிடங்களுக்காக 1.25 கோடி பேர் விண்ணப்பித்திருந்ததால் 2020 ஏப்ரல் - ஜூலை மாத காலகட்டத்தில் அந்த தேர்வை ஆன்லைன் வாயிலாக நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி CBT-1 எனும் அத்தேர்வு 133 ஷிப்டுகளாக 68 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டது. தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 14 அன்று வெளியானது. தேர்வு முறையில் பிரச்னைகள் இருப்பதாக தேர்வு எழுதிய தேர்வர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளத்திலும் தங்களின் எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர்.

    வன்முறை வெறியாட்டங்கள்:

    இந்நிலையில் பீகார் மாநிலம் கயா ரயில் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேர்வர்கள் திடீரென வன்முறையில் இறங்கினர். கயா ரயில் நிலையத்தினுள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்கள் மீது கல்லெறிந்தனர். இதில் ஒரு ரயிலுக்கு (Shramjeevi Express) தீ வைக்கப்பட்டது. தீ வைப்பு சம்வத்தில் சிக்கிய ரயில் தீக்கிரையானது. கயா ரயில் நிலையமும் அடித்து நொறுக்கப்பட்டது.

    Also read:   ரயில்வே தேர்வுக்கு எதிர்ப்பு: தேர்வர்கள் ரயிலுக்கு தீ வைத்ததால் பதற்றம்

    இந்நிலையில், தேர்வர்களை வன்முறைக்கு தூண்டியதாக பிரபல யூடியூபர் கான் சார் மற்றும் 400க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    பாட்னாவில் வன்முறையை தூண்டிவிட்டதாக போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வரும் கான் சார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ராஜேந்திர நகர் ரயில் முனையத்தி ஆயிரக்கணக்கான தேர்வர்கள் கடந்த திங்களன்று ரயில்வேக்கு சொந்தமாக சொத்துக்களை அடித்து சேதப்படுத்தினர், மேலும் சுமார் 5 மணி நேரம் ரயில் சேவையும் இதனால் தடைபட்டது.

    Also read:  நோய்வாய்ப்பட்ட தாயாருக்கு மருந்து வாங்குவதாக சிறுமியை அழைத்துச் சென்று பலாத்காரம்!!

    போராட்டம் நடத்திய மாணவர்கள் சிலரை கைது செய்து போலீசார் விசாரித்த நிலையில், கான் சார் தங்களை போராட ஊக்கப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். சாலைகளில் திரண்டு போராடினால் மட்டுமே ரயில்வே தேர்வு ரத்து செய்யப்படும் என கான் சார் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

    Khan sir


    தேர்வர்களின் வாக்குமூலம், வைரல் வீடியோக்கள் போன்றவற்றை ஆராய்ந்ததில் பயிற்சி மையத்தின் தலைவர்கள் பாட்னாவில் வன்முறையை தூண்டிவிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கான் சார், பயிற்சி மைய தலைவர்கள் என சுமார் 400 பேர் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    யார் இந்த கான் சார்?

    கான் சார் பாட்னாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர். இவர் ஜிஎஸ் ரிசர்ச் மையம் என்ற பிரபல பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். தனித்துவமான பயிற்சிகளால் பிரபலமானார். இந்நிலையில் கான் சார் வன்முறையை தூண்டியதாக தகவல்கள் பரவிய நிலையில், அவர் மாணவர்களை போராட வேண்டாம் என கோரிக்கை விடுத்து புதிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
    Published by:Arun
    First published:

    Tags: Indian Railways, Violence

    அடுத்த செய்தி