• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • விமான நிறுவனங்களை மறைமுகமாக நையாண்டி செய்த ரயில்வே!

விமான நிறுவனங்களை மறைமுகமாக நையாண்டி செய்த ரயில்வே!

இந்திய ரயில்வே துறை.

இந்திய ரயில்வே துறை.

காரணமே இல்லாமல் பணம் வசூல் செய்வதை நிராகரித்து, நியாமான விலையில் இயக்கப்படும் நல்ல பழமையான இந்திய ரயில்வேயில் பயணம் செய்யுங்கள் என்று ரயில்வே ட்வீட் செய்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
விமானத்தில் இணையதளம் மூலமாக செக் இன் செய்யப்படுவதற்கு கூடுதல் கட்டணம் என்று சில விமான நிறுவனங்கள் அறிவித்துள்ள நிலையில், இந்திய ரயில்வே அதனை மறைமுகமாக கிண்டல் செய்து ட்வீட் செய்துள்ளது.

விமான சேவையில் வருவாயை அதிகரிப்பதற்காக இண்டிகோ மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனங்கள் புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. விமானத்தில் ஏறுவதற்கு முன் பயணிகளின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சரிபார்த்த பின் உள்ளே அனுமதிப்பது வழக்கமான நடைமுறையாகும்.

விமான நிலையத்தில் நேரம் வீணாகுவதை தடுக்கவும் எளிமையாகவும் இருப்பதால் இணையதளம் வாயிலாகவே செக் இன் முறை தற்போது கையாளப்படுகிறது.

கோப்புப்படம்


இதற்கு இனிமேல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று இண்டிகோ உள்ளிட்ட சில விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, ஒரு இருக்கைக்கு கூடுதலாக ரூ.200 முதல் ரூ.1000 வரை வசூலிக்கப்படுகிறது. இல்லையெனில், வரிசையில் நின்று செக் இன் செய்து கொள்ளலாம். இது பயணிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமான நிறுவனங்களின் இந்த செயலை மறைமுகமாக கிண்டல் செய்து ட்வீட் போட்டுள்ள ரயில்வே அமைச்சகம், “இணையதள செக் இன்-களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. உடமைகள் பரிசோதனைக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை. காரணமே இல்லாமல் பணம் வசூல் செய்வதை நிராகரித்து, நியாமான விலையில் இயக்கப்படும் நல்ல பழமையான இந்திய ரயில்வேயில் பயணம் செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளது.

Also See..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: