நிர்வாக வாரியத்தில் இருப்பவருக்கே ரயில்வே யுனிவர்சிட்டியின் பெரிய காண்ட்ராக்ட்: கிளம்பியது புதிய சர்ச்சை

ஒப்பந்தம் பெற்ற பிரமத் ராஜ் சின்ஹா ரயில்வே நிர்வாகத்திலும் இருப்பவர்.

9டாட்9 என்ற நிறுவனத்துக்கு ரயில்வே பல்கலைக் கழகம் ரூ.6கோடி பெறுமான கன்சல்டன்சி ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது, ஆனால் இந்த நிறுவனத்தின் நிறுவனர் பிரமத் ராஜ் சின்ஹா என்பவர் ரயில்வே பல்கலைக் கழகத்தின் நிர்வாக வாரியத்திலும் பதவியில் இருப்பவர் ஆவார், இதனால் லாபம் தரும் இரட்டைப் பதவி மற்றும் ரயில்வே பல்கலை நிர்வாகத்திலிருப்பவரின் நிறுவனத்திற்கே ஆலோசக ஒப்பந்தம் அளிப்பது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

 • Share this:

  முன்னணி ஆங்கில நாளேடான தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்திகளின் படி ரயில்வே பல்கலைக் கழகத்தின் ஆலோசக ஒப்பந்தத்தைப் பெற்ற பிரமத் ராஜ் சின்ஹா, 9டாட்9 நிறுவனத்தின் நிறுவனர் என்பதோடு நிர்வாக இயக்குநரும் ஆவார், இவர் ரயில்வே பல்கலைக் கழக மேலாண்மை போர்டிலும் இருப்பவர். நேஷனல் ரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனத்தின் ஆலோசக நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட இந்த சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் மாதம் ரூ.65 லட்சம் பெறுமானமானது. இதோடு 9 மாதங்களுக்கான ஜிஎஸ்டியும் உண்டு என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

  இதனையடுத்து ரயில்வே அதிகாரிகள் ரயில்வே பதவியில் இருப்பவருக்கே எப்படி ஒப்பந்தம் அளிக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

  இந்த ரயில் மற்றும் போக்குவரத்து இன்ஸ்டிட்யூட்டின் ஒப்பந்தத்தை பிரமத் ராஜ் சின்ஹா இரண்டாவது முறையாகப் பெறுகிறார். கடந்த ஆண்டு ரயில்வே ஊழியர்களுக்கு மேலாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி அளிக்கும் ஒப்பந்தத்தை பெற்ற ஹரப்பா எஜுகேஷன் என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் இதே 9டாட்9 நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான பிரமத் ராஜ் சின்ஹா தான்.

  ரயில்வே ஊழியர்களுக்கு மேலாண்மை பயிற்சி அளிக்கும் இந்த நிறுவனத்தை ஒப்பந்தம் செய்த பிறகு இதுவரை ரூ.40 லட்சம் அளிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில நாளேடு கூறுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆனால் வழக்கம் போல் லாபம் தரும் இரட்டைப் பதவி விவகார கேள்வியை சம்பந்தப்பட்ட நபரிடம் அதே ஆங்கில ஊடகம் எழுப்பிய போது வழக்கம் போல் எல்லா விதிகளும் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது என்ற பதில்தான் கிடைத்துள்ளது.
  Published by:Muthukumar
  First published: