கொரோனா பரவலை தடுக்கவே ரயில் நிலைய நடைமேடை டிக்கெட் விலை உயர்வு: ரயில்வே நிர்வாகம்

கொரோனா பரவலை தடுக்கவே ரயில் நிலைய நடைமேடை டிக்கெட் விலை உயர்வு: ரயில்வே நிர்வாகம்

ரயில்நிலையம்

கொரோனா பரவலை தடுப்பதற்காகவே தற்காலிமாக சில ரயில் நிலையங்களில் நடைமேடை அனுமதி சீட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

 • Share this:
  கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவே ரயில் நடைமேடை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

  நாடு முழுவதும் உள்ள 18 ரயில்வே மண்டலங்களிலும் ரயில் நடைமேடை டிக்கெட் விலை 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் 50 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரயில்வே நிர்வாகம், ரயில்நிலையங்களில் மக்கள் அதிகளவு கூடுவதை தவிர்க்கவே நடைமேடை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இதனால் கூட்ட நெரிசலை தவிர்த்து மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

  மேலும் இந்த விலை உயர்வு தற்காலிக நடவடிக்கைதான் என குறிப்பிட்டுள்ள ரயில் நிர்வாகம், நிலைமை சீரடைந்ததும் டிக்கெட் விலை குறைக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.

  மேலும் படிக்க... நாங்குநேரி தொகுதியை பெற காய் நகர்த்தும் பாஜக... நயினார் நாகேந்திரனுக்கு வசப்படுமா?  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: