3 ஆண்டுகளில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

மாதிரிப் படம்

கடந்த 2015 - 2017 ஆண்டுகளில் மட்டும் ரயிலில் அடிபட்டு 49,790 பேர் உயிரிழந்தவர்கள் என ரயில்வே போலீசார் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பஞ்சாப்பில் தண்டவாளத்தின் நின்று கொண்டு தசரா விழா பார்த்தவர்கள் மீது ரயில் மோதிய விபத்தில் 59 பேர் உயிரிழந்த நிலையில், நாடு முழுவதும் கடந்த 2015 - 2017 ஆண்டுகளில் மட்டும் ரயிலில் அடிபட்டு 49,790 பேர் பலியாகியுள்ளனர் என ரயில்வே போலீசார் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸ் அருகே கடந்த 19-ம் தேதி இரவு தசரா விழாவை தண்டவாளத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீது ரயில் மோதியதில் 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த கோர விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

  தண்டவாளத்தில் நின்று நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள்


  இந்நிலையில், நாடு முழுவதும் ரயில் மோதி மட்டும் பலியானவர்கள் குறித்த விபரங்களை ரயில்வே போலீசார் வெளியிட்டுள்ளனர். 2015 முதல் 2017-ம் ஆண்டு வரை மூன்றாண்டுகளில் 49,790 பேர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக வடக்கு ரயில்வே மண்டலத்தில் 7908 பேரும் அதனை தொடர்ந்து தெற்கு ரயில்வே மண்டலத்தில் 6149 பேரும், கிழக்கு ரயில்வே மண்டலத்தில் 5670 பேரும் பலியாகியுள்ளனர்.

  பாதுகாப்பு எச்சரிக்கைகளை கவனிக்காமல் தண்டவாளத்தை கடப்பது, செல்போன் பேசியபடி தண்டவாளத்தில் நடந்து செல்வது ஆகியவையே ரயில் மோதி பலியாவதற்கு முக்கிய காரணமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக போதிய விழிப்புணர்வு ரயில்வே போலீசார் சார்பில் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ரயில்வே சட்டங்களின்படி ரயில்வே அமைப்பு, தண்டவாளத்தில் அத்துமீறி நுழைவது தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 1,20,923 பேர் இந்த சட்டத்தின் படி தண்டிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.2.94 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.  மேலும் செய்திகள்..

  வெடிக்கும் ‘இரு தலைகள்’ மோதல் - சிபிஐ அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு

  முதன்முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை!
  Published by:Sankar
  First published: