Home /News /national /

ஒரு கப் டீ ரூ.70, சர்வீஸ் சார்ஜ் மட்டும் ரூ.50 - பில்லை பார்த்து அதிர்ச்சியடைந்த ரயில் பயணி

ஒரு கப் டீ ரூ.70, சர்வீஸ் சார்ஜ் மட்டும் ரூ.50 - பில்லை பார்த்து அதிர்ச்சியடைந்த ரயில் பயணி

ஒரு கப் டீயின் விலை ரூ.70

ஒரு கப் டீயின் விலை ரூ.70

ஒரு கப் டீக்கு ரூ.50 ஜிஎஸ்டி போடுவதா என சம்பந்தப்பட்ட ரயில் பயணி சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

    சதாப்தி ரயில் பயணம் செய்த ஒருவர், ஒரு கப் டீயை ரூ.70க்கு வாங்கி அதிர்ச்சி அடைந்துள்ளார். கடந்த ஜூன் 28ஆம் தேதி டெல்லி - போபால் இடையே சதாப்தி ரயில் பயணம் செய்த நபர் ஒருவர் காலை ஐஆர்சிடிசி கேட்ரிங் சேவை விற்பனை செய்த டீ வாங்கியுள்ளார். ஒரு கப் டீ ஆர்டர் செய்த அவருக்கு பில்லை பார்த்ததும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம் ஒரு கப் டீயின் விலை ரூ.70 என பில்லில் அச்சடிக்கப்பட்டுள்ளது.

    என்ன விவரம் என அவர் பில்லை உற்றுப் பார்க்கையில், அதில் டீயின் விலை ரூ.20 என்றும், அதற்கான சர்வீஸ் சார்ஜ் ரூ.50 என்றும் அச்சடித்து எழுதப்பட்டுள்ளது. அந்த பில்லை போட்டோ பிடித்து இணையத்தில் பதிவிட்ட அந்த பயணி. இது என்ன பகல் கொள்ளையாக உள்ளது. ஒரு கப் டீக்கு ரூ.50 ஜிஎஸ்டி போடுவதா என கேள்வி எழுப்பியுள்ளார். இவரின் இந்த பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

    இந்நிலையில், பயணியின் புகாருக்கு ரயில் அதிகாரிகள் பதில் விளக்கம் அளித்துள்ளனர். அதில், ராஜ்தானி, சாதப்தி போன்ற உயர் ரக ரயிலில் பயணிப்பவர்கள் முன்பதிவின் போதே உணவை புக் செய்யவில்லை என்றால், பயணித்தின் போது உணவு வாங்கும் போது சர்வீஸ் சார்ஜாக ரூ.50 வசூலிக்கப்படும்.

    ட்விட்டரில் வைரலான பில்


    அது ஒரு கப் டீயாக இருந்தாலும் சர்வீஸ் சார்ஜ் விலை ரூ.50 என கூறியுள்ளது. முன்பெல்லாம், ராஜ்தானி, சதாப்தி போன்ற ரயில்களில் உணவு சேவை கட்டாயமாக வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது ஆப்ஷனலாக மாற்றப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பாஜகவில் இணைகிறாறாரா பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்?

    உணவு தேவைப்படாத பட்சத்தில் பயணிகள், பயணத்திற்கான டிக்கெட்டை மட்டுமே செலுத்திக்கொள்ளலாம். அதேவேளை, பயணத்தின் போது உணவு வாங்கினால் அதற்கு ரூ.50 சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்படும் என புதிய விதி தற்போது நடைமுறையில் உள்ளது. என்ன இருந்தாலும் ஒரு கப் டீக்கு ரூ.50 சர்வீஸ் சார்ஜ் ரொம்ப ஓவர் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பொங்கி வருகின்றனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Indian Railways, IRCTC, Tea

    அடுத்த செய்தி