Home /News /national /

ராஜஸ்தான் தாரா காட்ஸ் வனப்பகுதியில் ரம்மியமாக செல்லும் ரயில்.. வைரலாகும் வீடியோ

ராஜஸ்தான் தாரா காட்ஸ் வனப்பகுதியில் ரம்மியமாக செல்லும் ரயில்.. வைரலாகும் வீடியோ

dara ghats

dara ghats

Dara ghat : ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ, ராஜஸ்தானில் உள்ள தாரா காட்ஸின் அழகிய நிலப்பரப்பு வழியாக எக்ஸ்பிரஸ் ரயில் கடப்பதைக் காட்டுகிறது.

இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். அதன் ரயில்கள் தேசத்தின் சில வியப்பூட்டும் இயற்கை வழித்தடங்கள் வழியாக பயணிக்கின்றன. மலை குகைகள் , தொங்கும் பாலங்கள், நதியின் மேல் செல்லும் ரயில்கள் என்று ரகரகமாய் இருக்கிறது.

இந்நிலையில், ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அப்படிபட்ட ஒரு இயற்கை சூழலில் ரயில் பயணிக்கும் ரம்மியமான காட்சியை பகிரிந்துள்ளது. இந்த வீடியோ, ராஜஸ்தானில் உள்ள தாரா காட்ஸின் அழகிய நிலப்பரப்பு வழியாக எக்ஸ்பிரஸ் ரயில் கடப்பதைக் காட்டுகிறது. பகிரப்பட்டதிலிருந்து, இந்த வீடியோ ட்விட்டரில் சுமார் 11,000 பார்வைகளையும் 600 விருப்பங்களையும் குவித்துள்ளது.

ஒரு வாரம் தென்னிந்தியாவில் ஜாலியா டூர் போகலாம்... IRCTC-ன் சூப்பரான பேக்கேஜ்

"இயற்கையின் மிகுதியால் அருளப்பட்டது" என்ற தலைப்பில், அழகான இடத்தின் வீடியோ ட்விட்டரில் இதயங்களை வென்று வருகிறது. அமைச்சகத்தின் ட்வீட் "@wc_railway இன் ராஜஸ்தான் கோட்டா-நாக்டா பகுதியில் உள்ள தாரா காட்ஸின் பசுமையான நிலப்பரப்பில் எக்ஸ்பிரஸ் ரயிலின் பரந்த காட்சி.." என்று உள்ளிட்டுள்ளது.



41-வினாடிகள் கொண்ட கிளிப் பரந்த நிலப்பரப்பின் காட்சியில் அழகான சுற்றுப்புறத்தில் ரயில் கடப்பதைக் காட்சிப்படுத்துகிறது. ராஜஸ்தான் கோட்டா-நாக்டா பகுதியில் அமைந்துள்ள மலை பகுதியில் பாம்பு ஊர்வது போல் ரயில்  அழகாக கடந்து செல்கிறது.   இந்திய ரயில்வே இந்த ரம்யமான காட்சியை பதிவிட்டதற்கு நன்றி என்று நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆண்டு ஜனவரியில், ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவில் பனி மூடிய சதுரா ரயில் நிலையத்திற்குள் ரயில் நுழையும் வீடியோவை, அழகிய கல்கா-சிம்லா ரயில் பாதை வழியாக ரயில்கள் செல்லும் வீடியோவையும் அமைச்சகம் ட்வீட் செய்தது.

பிப்ரவரியில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கட்டுமானத்தில் உள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் ரயில் பாலத்தின் புகைப்படத்தை ட்வீட் செய்தார். இது டிசம்பரில் 2022 இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாலம் 467 மீட்டர் (1,532 அடி) உயரம் கொண்டிருக்கும். ஜம்மு காஷ்மீரில் செனாப் ஆற்றின் ஆழமான பள்ளத்தாக்கில் கட்டப்பட்டு வருகிறது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Indian Railways, Railway, Rajastan

அடுத்த செய்தி