பிளாட்பார்ம் டிக்கெட் மூலம் ரயில்வே துறைக்கு வருவாய் எவ்வளவு தெரியுமா?

பிளாட்பார்ம் டிக்கெட் மூலம் ரயில்வே துறைக்கு வருவாய் எவ்வளவு தெரியுமா?
மின்சார ரயில்
  • News18
  • Last Updated: November 28, 2019, 11:37 AM IST
  • Share this:
கடந்த 2018-19 நிதியாண்டில் ரயில்வே விளம்பரம், நுழைவுச் சீட்டு மூலம் மொத்தம் 370 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் வைக்கப்படும் விளம்பரங்கள், ரயில்நிலையங்களில் உள்ள கடைகளின் வாடகை மூலம் 230 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும்.

அத்துடன், ரயில் நிலையங்களுக்கு உள்ளே செல்லும் அனுமதிச் சீட்டான பிளாட்பார்ம் டிக்கெட் (Platform ticket) மூலம் மட்டும் 140 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.


2018 ஏப்ரல் முதல் 2019 மார்ச் வரையிலான 12 மாதங்களில் இந்த வருவாய் எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Also see...
First published: November 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்