ஹோம் /நியூஸ் /இந்தியா /

பயணிகள் ரயில் சேவையால் அரசுக்கு லாபம் இல்லை... மக்களுக்காகத் தான் இயக்குகிறோம்- அமைச்சர் தகவல்

பயணிகள் ரயில் சேவையால் அரசுக்கு லாபம் இல்லை... மக்களுக்காகத் தான் இயக்குகிறோம்- அமைச்சர் தகவல்

 ரயில்

ரயில்

ஒரு ரூபாய்க்கு 55 காசுகள் நஷ்டம் என்ற அளவில் தான் பயணிகள் ரயில் சேவை இயக்கப்படுகிறது என இணை அமைச்சர் ராவ்சாஹேப் தவே தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Bihar, India

  இந்திய மக்களை இணைக்கும் உயிர் நாடியாக திகழ்வது இந்தியன் ரயில்வே சேவையாகும். உலகின் மிகப் பெரிய பொது போக்குவரத்து சேவை வழங்கி வரும் இந்திய ரயில்வே சாமானிய எளிய மக்கள் தொடங்கி பொருளாதாரத்தில் உயர்தளத்தில் இருக்கும் மக்கள் வரை அனைவரும் பயணிக்கும் சேவையை வழங்கி வருகிறது.

  இருப்பினும் நாட்டில் சமீப காலமாக பாசஞ்ஜர் ரயில் சேவை எனப்படும் பயணிகள் ரயில் சேவை எண்ணிக்கை குறைக்கப்பட்டு, அவை விரைவு ரயில்களாக தரம் மாற்றப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக நடுத்தர மற்றும் உயர் வகுப்பினருக்கு கட்டுப்படியாகும் விதத்தில் ரயில் சேவை மாறுவதாகவும், தினசரி பயணம் மேற்கொள்ளும் ஏழை மக்களுக்கு சுமை அதிகரிப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

  இந்நிலையில், பீகார் மாநிலத்தில் உள்ள ஜல்னா என்ற பகுதியில் இருந்து சப்ரா என்ற பகுதிக்கு புதிய பயணிகள் ரயில் சேவையை ரயில்வே இணை அமைச்சர் ராவ்சாஹேப் தன்வே தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பயணிகள் ரயில்சேவையால் ரயில்வேவுக்கு லாபம் ஏதும் இல்லை. ஒரு ரூபாய்க்கு 55 காசுகள் நஷ்டம் என்ற அளவில் தான் பயணிகள் ரயில் சேவை இயக்கப்படுகிறது.

  இதையும் படிங்க: "130 கோடி இந்தியர்களின் விருப்பம்... ரூபாய் நோட்டுகளில் லக்ஷ்மி, விநாயகர் படங்கள் வேண்டும்"..அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமருக்கு கடிதம்

  ஆனால், பிரதமர் மோடியின் அரசு லாபத்திற்காக செயல்படுவதில்லை. மக்களின் நலனுக்காகதான் செயல்படுகிறது. எனவே, இந்த இழப்பை ஈடுகட்ட சரக்கு போக்குவரத்து போன்ற வேறு வழிகளில் வருவாய் ஈட்டும் திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது" என்றார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Indian Railways, Loss, Passengers, PM Modi