ரயில் சேவை குறைப்பா... பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவையா? : ரயில்வே வாரியம் விளக்கம்

ரயில் சேவை குறைப்பா... பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவையா? : ரயில்வே வாரியம் விளக்கம்

வட மாநிலத் தொழிலாளர்கள்

ஊரடங்கு அச்சத்தால் புலம்பெயர் தொழிலாளர்களின் கூட்டம் ரயில்களில் அலைமோதுகிறது. ரயில் சேவை குறைக்கப்படலாம் என்றும், நிறுத்தப்படலாம் எனவும் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்து ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

 • Share this:
  ஊரடங்கு அச்சத்தால் புலம்பெயர் தொழிலாளர்களின் கூட்டம் ரயில்களில் அலைமோதுகிறது. ரயில் சேவை குறைக்கப்படலாம் என்றும், நிறுத்தப்படலாம் எனவும் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்து ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

  கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாட்டின் பல்வேறு நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. ஊரடங்கு அச்சத்தால் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

  கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சத்தில் ரயில்களில் கூட்டம் அதிகரிக்கத் தெடங்கியுள்ளது. அத்துடன் பயணிகள் ரயில்கள் நிறுத்தப்படலாம் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

  இந்நிலையில், ரயில்வே வாரிய தலைவர் சுனீத் சர்மா இது குறித்து கூறுகையில், ரயில் சேவையை குறைக்கவோ, நிறுத்தவோ நாங்கள் திட்டமிடவில்லை. தேவைக்கேற்ப ரயில்கள் இயக்கப்படும். எனவே, பீதி அடையத் தேவையில்லை.

  கூட்ட நெரிசல் காரணமாக ரயில்கள் அதிகம் தேவைப்பட்டால், குறுகிய இடைவெளியில் கூடுதலாக ரயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். கோடை காலங்களில் வழக்கமாக ரயில்களில் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

  நெரிசலை தவிர்க்க கூடுதலாக ரயில்களை அறிவித்துள்ளோம். அதனால் ரயில்கள் பற்றாக்குறை எதுவும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. தேவைப்பட்டால், இன்னும் அதிக ரயில்கள் இயக்கப்படும் என்று ஒவ்வொருவருக்கும் உறுதி அளிக்கிறேன்.

  Must Read : கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் நடவடிக்கை : வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

   

  ரயில்களில் பயணிக்க கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவையில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ரெயில் சேவையை குறைப்பதற்கோ, நிறுத்துவதற்கோ அந்த மாநில அரசு எங்களுக்கு கோரிக்கை விடுக்கவில்லை” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
  Published by:Suresh V
  First published: