Home /News /national /

மும்பை கடற்கரையில் ஏகே47 துப்பாக்கி, வெடி பொருள்களுடன் இரு படகுகள் சிக்கின - பயங்கரவாதிகள் சதியா?

மும்பை கடற்கரையில் ஏகே47 துப்பாக்கி, வெடி பொருள்களுடன் இரு படகுகள் சிக்கின - பயங்கரவாதிகள் சதியா?

மும்பையில் வெடிபொருளுடன் மர்ம படகு பறிமுதல்

மும்பையில் வெடிபொருளுடன் மர்ம படகு பறிமுதல்

2008ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து படகு மூலமாக தன் வந்து மும்பையை தாக்கினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள ராய்கட் பகுதியில் இரு படகுகள் சந்தேகத்திற்குரிய முறையில் கைப்பற்றப்பட்டது. இந்த படகில் இருந்து மூன்று ஏகே 47 ரக துப்பாக்கிகள், குண்டுகள், வெடிபொருள்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. மும்பையில் இருந்து சுமார் 200 கிமீ தொலைவிலும், புனேவில் இருந்து 170 கிமீ தொலைவிலும் ஹரிஹரேஷ்வர் என்ற கடற்கரை உள்ளது. இந்த கடற்கரை ராய்கட் மாவட்டத்தை சேர்ந்தது.

    இங்கு 16 மீட்டர் நீளம் உள்ள படகு ஒன்றை அப்பகுதி மீனவர்கள் கண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் அனுப்பப்பட்டு அவர்கள் படகை கைப்பற்றினர். அப்போது அதில் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், வெடிபொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ரய்காட் மாவட்டம் மட்டுமல்லாது மும்பையின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ராய்கட் எம்எல்ஏ அதிதி தத்கரே கூறியதாவது, "இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நாளை தஹி ஹண்டி விழாவும், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு 10 நாள்களே உள்ள நிலையில், இது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இதில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்" என்றுள்ளார்.

    மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசும் இந்த சம்பவம் தொடர்பாக கேட்டறிந்து நிலைமையை கண்காணித்து வருகிறார். "இதுவரை பயங்கரவாத செயல்பாடுகளுக்கான முகாந்திரம் கண்டறியப்படவில்லை, இருப்பினும் அனைத்து கோணங்களிலும் பாதுகாப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர். பாதுகாப்பு விவகாரங்களில் சமரசம் இல்லை" என துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பீகார் அமைச்சர்களில் 72 சதவீத பேர் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் - ADR அறிக்கையில் தகவல்

    ஏற்கனவே, 2008ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து படகு மூலமாக தன் வந்து மும்பையை தாக்கியுள்ளனர். எனவே, இன்றைய நிகழ்வு குறித்து மகாராஷ்டிரா காவல்துறையுடன், பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் விசாரித்து வருகின்றனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Mumbai, Security tightened

    அடுத்த செய்தி