என்னை எந்த பிரிவின் கீழ் கைது செய்கிறீர்கள்? போலீசாரிடம் கேள்வி கேட்கும் ராகுல் காந்தி (வீடியோ)

ராகுல் காந்தி

ராகுல் காந்தி, தயவுசெய்து என்னை எந்த பிரிவின் கீழ் கைது செய்கிறீர்கள் என்று சொல்லுங்கள்" என்று போலீசாரிடம் கேட்கிறார். அதற்கு பதில் அளித்த காவல் துறையினர் உத்தரவை மீறியதற்காக பிரிவு 188 ஐபிசியின் கீழ் நாங்கள் உங்களை கைது செய்கிறோம்" என்று போலீசார் கூறுகின்றனர்.

 • Share this:
  உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தை பார்க்கச் சென்ற ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தும் போது காவல்துறை தடியடி நடத்தியதாக கூறியுள்ளார். அதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் 19 வயதான பட்டியலினத்தை சேர்ந்த இளம்பெண் ஆதிக்க சாதியை சேர்ந்த கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

  அவரது குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் உத்தரப்பிரதேசம் வந்தனர்.

  உ.பி.யில் ஹத்ராஸ் நோக்கி நடைபயணம் சென்ற ராகுல் காந்தியை காவல்துறையினர் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து தடுத்து நிறுத்தும் காவல் துறையினரிடம் ராகுல் காந்தி நான் தனியாக ஹத்ராஸுக்கு நடக்க விரும்புகிறேன். தயவுசெய்து என்னை எந்த பிரிவின் கீழ் கைது செய்கிறீர்கள் என்று சொல்லுங்கள்" என்று போலீசாரிடம் கேட்கிறார்.

      

  அதற்கு பதில் அளித்த காவல் துறையினர் உத்தரவை மீறியதற்காக பிரிவு 188 ஐபிசியின் கீழ் நாங்கள் உங்களை கைது செய்கிறோம்" என்று போலீசார் கூறுகின்றனர்.
  Published by:Sankaravadivoo G
  First published: