சோனியா காந்தி ஒரு நாட்டியக்காரி: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

நடிகை சப்னா செளத்ரி, இந்தி பிக்பாஸ் 11ல் கலந்து கொண்டு பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

news18
Updated: March 25, 2019, 8:20 AM IST
சோனியா காந்தி ஒரு நாட்டியக்காரி: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு
சோனியா காந்தி
news18
Updated: March 25, 2019, 8:20 AM IST
நடிகை சப்னா செளத்ரி காங்கிரஸ் கட்சியில் இணைந்ததை விமர்சித்த பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங், இத்தாலியில் சோனியா காந்தி செய்து வந்த தொழிலை செய்யும் சப்னாவையே ராகுல் காந்தி திருமணம் செய்யட்டும் எனக் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் போஜ்புரி நடிகை சப்னா செளத்ரி இணைந்துள்ளார். இதுகுறித்து விமர்சித்த உத்தரப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ., சுரேந்திர சிங், ”ராகுல் காந்திக்கு அரசியல்வாதிகள் மீதெல்லாம் நம்பிக்கை போய்விட்டது போல, ஒரு நாட்டியக்காரியை கட்சியில் சேர்த்துள்ளார்.

ராகுல் காந்தி சப்னாவை கட்சியில் சேர்த்தது மட்டுமல்லாமல், திருமணமும் செய்துகொள்ளட்டும். ஏனென்றால், அவரது அம்மா சோனியா, இத்தாலியில் செய்து வந்த தொழிலைத் தான் சப்னாவும் இங்கே செய்து வருகிறார்” என்றார்.

Loading...
பாஜக எம்.எல்.ஏ.,வின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நடிகை சப்னா செளத்ரி, இந்தி பிக்பாஸ் 11-ல் கலந்து கொண்டு பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also See...
First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...