நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம், டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தற்போது, 8 இடங்கள் அதிகரித்து 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல் காந்தி முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
மேலும், தனது பதவிவிலகல் குறித்து காரியக் கமிட்டியே முடிவுசெய்யும் என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம், டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில், சோனியாகாந்தி, ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
அப்போது, தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்தும், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநில சட்டப்பேரவைகளில் அண்மையில் வெற்றிபெற்ற நிலையில், தற்போது தோல்வியடைந்தது ஏன் என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய ராகுல் முன்வருவார் என்று கூறப்படுகிறது. அதேநேரம், ராஜினாமாவை கட்சித் தலைவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய கடந்த 2014-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது போன்று தற்போதும் குழு அமைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கர்நாடகா, உத்தரப்பிரதேசம், ஒடிசா மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய முன்வந்துள்ளனர்.
Also see... காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகுவதாக தகவல்?
Also see...
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Congress President Rahul Gandhi, Delhi, Lok Sabha Election 2019