ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு திடீர் முடக்கம்!

rahul gandhi

தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் ட்விட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி ராகுலின் கணக்கு மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியது.

  • Share this:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கணக்கை ட்விட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி சமூக வலைத்தளமான ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வருபவர். எதிர்கட்சி என்ற வகையில் அரசின் மீதான கருத்துக்களை அவர் அவ்வப்போது தனது ட்விட்டர் கணக்கு மூலம் முன்வைத்து வந்தார். இந்நிலையில் நேற்று அவரது கணக்கை ட்விட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியது.

விதிமுறைகளை மீறி பதிவிட்டதால் அவரது கணக்கை தற்காலிகமாக முடக்கப்பட்டிருப்பதாக தெரியவந்ததுள்ளது.

Also read: Taliban vs Afghan Forces | ஆப்கன் அரசுப் படைகளை விட தலிபான்கள் எந்த வகையில் பலம் வாய்ந்தவர்கள்?

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பதிவில், ‘ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கிறது. அவரது கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு திரும்பக் கொண்டு வரும் பணி நடந்து வருகிறது. அதுவரையில் ராகுல் காந்தி தனது பிற சமூக வலைத்தள பக்கங்கள் வாயிலாக இணைப்பில் இருப்பார். தொடர்ந்து மக்களுக்காகவும், அவர்களின் நலன் சார்ந்த பணிகளுக்காகவும் அவர் குரல் எழுப்புவார். ஜெய் ஹிந்த்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ராகுல் காந்தி


ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு 24 மணி நேரத்திற்குள் மறுசீரமைப்பு பணிகளுக்கு பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று தெரியவந்துள்ளது.

Also read: அரசு உயர் அதிகாரி துன்புறுத்தியதாக கூறி முகத்தில் மண்ணை எறிந்த ஜூனியர் பெண் அதிகாரி.. வைரல் வீடியோ..

காரணம் என்ன?

அண்மையில் டெல்லியில் 9 வயதான தலித் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அச்சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த ராகுல் காந்தி, சிறுமியின் தாயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கடந்த வெள்ளியன்று தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.

போக்ஸோ சட்டப்படி, பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரின் குடும்பத்தினர் குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதோ, பத்ரிகை, தொலைக்காட்சிகளில் வெளியிடுவதோ குற்றமாகும். இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் ட்விட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி ராகுலின் கணக்கு மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் ராகுலின் அந்த புகைப்பட ட்விட்டை நீக்கியது. அந்த பதிவை நீக்கிய 24 மணி நேரத்திற்கு குறிப்பிட்ட கணக்கை முடக்கி வைப்பது ட்விட்டரின் செயல்பாடாகும். எனவே தான் ராகுலின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கிறது.
Published by:Arun
First published: