• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யவேண்டும் - குடியரசுத் தலைவரிடம் முறையிட்ட ராகுல் காந்தி

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யவேண்டும் - குடியரசுத் தலைவரிடம் முறையிட்ட ராகுல் காந்தி

ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர்

ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர்

மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ராகுல் காந்தி கோரிக்கைவைத்துள்ளார்.

  • Share this:
    உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ராகுல் காந்தி தலைமையிலான குழுவினர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து மனு அளித்தனர்.

    உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது, அவர்கள் மீது கார் ஏற்றியதாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதே கோரிக்கையை வலியுறுத்தி, ராகுல் காந்தி. குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுனா கார்கே, ஏகே அந்தோனி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்து மனு அளித்தனர்.

    அஜய் மிஸ்ரா மத்திய அமைச்சராக நீடித்தால், விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் நேர்மையான விசாரணை நடைபெறாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    லக்கிம்பூர் விவகாரம் முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் ஹாவோர்ட் கென்னடி பள்ளியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், விவசாயிகளின் கொலை பாஜக ஆளும் மாநிலத்தில் நடைபெற்றுள்ளதால் பெரிதாக்கப்படுவதாக கூறினார்.

    இதனிடையே, 17 ஆண்டுகளுக்கு முன்னர் அஜய் மிஸ்ரா தொடர்புடைய கொலை வழக்கில் விரைவில் தீர்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 2003- ஆம் ஆண்டில் லக்கிம்பூரில் 24 வயதான பிரபாத் குப்தா என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கையில் அஜய் மிஸ்ராவின் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறிய அலகாபாத் நீதிமன்றம் அஜய் மிஸ்ரா உள்ளிட்ட சிலரை விடுவித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நிலுவையில் உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: