• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Rahul Gandhi : கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா - ராகுல் காந்தி கவலை

Rahul Gandhi : கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா - ராகுல் காந்தி கவலை

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் கவலை அளிக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுங்கள்.

  • Share this:
    கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    கொரோனா தொற்றின் 2ஆவது அலையின் பாதிப்பிலிருந்து நாடு மீண்டுவரும் நிலையில், கேரள மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2 நாள்களில் பதிவான மொத்த பாதிப்பில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக கேரளாவில் பதிவாகியுள்ளது. கடந்த புதன்கிழமை 22,056 பேருக்கும், வியாழக்கிழமை 22,129 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டது.

    இதையடுத்து, தொற்று பாதிப்பு நடவடிக்கையில் கேரள அரசுக்கு உதவும் வகையில், தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் எஸ்.கே.சிங் தலைமையில் 6 பேர் கொண்ட குழு கேரளாவில் ஆய்வு மேற்கொள்கிறது.

     



    இந்நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் கவலை அளிக்கிறது. அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுமாறு மாநிலத்தில் உள்ள எனது சகோதர, சகோதரிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். தயவுசெய்து உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் வருபவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. களியக்காவிளை சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறையினரும் காவல்துறையினரும் இணைந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    Must Read : அண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா... தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு

    கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றன. கேரள பதிவெண் கொண்ட வாகனங்களில் வருபவர்களிடம் கொரோனா நெகடிவ் சான்றிதழ் இல்லை என்றால் தொற்று பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், கேரளாவில் வார விடுமுறை நாட்களாகிய சனி, மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: