ஹோம் /நியூஸ் /இந்தியா /

நவீன தமிழ் கலாச்சாரத்துக்கு உங்கள் குரல் பங்களித்துள்ளது - கமல்ஹாசனுக்கு ராகுல் காந்தி வாழ்த்து

நவீன தமிழ் கலாச்சாரத்துக்கு உங்கள் குரல் பங்களித்துள்ளது - கமல்ஹாசனுக்கு ராகுல் காந்தி வாழ்த்து

ராகுல் காந்தி கமல்ஹாசன்

ராகுல் காந்தி கமல்ஹாசன்

கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமல்ஹாசன் தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கமல்ஹாசனுக்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும்படி கமல்ஹாசன் அறிவித்திருந்தார். கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் #HBDKamalHaasan என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. கமலுக்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  அவருடைய ட்விட்டர் பதிவில், ‘பிறந்தநாள் வாழ்த்துகள் கமல்ஹாசன். நவீன தமிழ் கலாச்சாரத்துக்கு உங்களுடைய உறுதியான குரல் பங்களித்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  முன்னதாக பினராயி விஜயன் வாழ்த்துப் பதிவில், ‘அன்புள்ள கமல்ஹாசன் அவர்களுக்கு எனது கனிவான வாழ்த்துகள். அவருடைய பிறந்த நாள் மற்றும் இந்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துகள்“ என்று குறிப்பிட்டிருந்தார்.

  மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘கருணாநிதியால் 'கலைஞானி' என்று போற்றப்பட்ட - எனது நெஞ்சம் நிறைந்த அன்புக்கு உரிய நண்பர் கமல்ஹாசனுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

  நலமுடன் நீண்ட காலம் வாழ்க!’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Kamal Haasan, Rahul gandhi