• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • லக்கிம்பூர் கேரிக்கு ராகுல் காந்தியின் வருகை அரசியல் சுற்றுலாவின் ஒரு எடுத்துக்காட்டு - மத்திய அமைச்சர் விமர்சனம்

லக்கிம்பூர் கேரிக்கு ராகுல் காந்தியின் வருகை அரசியல் சுற்றுலாவின் ஒரு எடுத்துக்காட்டு - மத்திய அமைச்சர் விமர்சனம்

Rahul Gandhi

Rahul Gandhi

ராகுல் காந்திக்கு உண்மையில் அனுதாபம் மற்றும் இரக்கம் எதுவும் இல்லை. எங்கெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு அரசியல் சுற்றுலா மேற்கொள்கிறார்.

  • Share this:
உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரிக்கு ராகுல் காந்தியின் வருகை அரசியல் சுற்றுலாவின் ஒரு எடுத்துக்காட்டு என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சாடியுள்ளார்.

கடந்த அக்டோபர் 3ம் தேதியன்று உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புர் கேரி மாவட்டத்தின் டிகோனியா எனும் கிராமத்திற்கு, உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா வருவதை கண்டித்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே அந்த நேரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மத்திய அமைச்சர் மகன் பயணம் செய்த எஸ்.யூ.வி கார் மோதியதில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 4 பேர் பலியானதாகவும், அதற்காக பாஜகவினர் பயணம் செய்த காரை கவிழ்த்து அதிலிருந்த 4 பேரை அங்கிருந்தவர்கள் அடித்துக் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. அன்று நடைபெற்ற கலவரத்தில் விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தை கண்டித்து எதிர்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் லக்கிம்புர் கேரிக்கு சென்றபோது, அங்கு செல்லவிடாமல் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்க்க அனுமதிக்கப்பட்டதன் பேரில் இருவரும் அங்கு சென்றனர்.

Also Read: நடுக்காட்டில் 17 வருடங்கள் அம்பாசடர் காரில் தனிமையில் வாழும் மனிதன் - ஒரு நெகிழ்ச்சி வாழ்வியல்

இச்சம்பவம் குறித்து மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சரான கிரிராஜ் சிங் கூறுகையில், லக்கிம்பூர் கேரிக்கு ராகுல் காந்தியின் வருகை அரசியல் சுற்றுலாவின் ஒரு எடுத்துக்காட்டு என கூறினார்.

இது குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் மேலும் கூறுகையில், ராகுல் காந்திக்கு உண்மையில் அனுதாபம் மற்றும் இரக்கம் எதுவும் இல்லை. எங்கெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு அரசியல் சுற்றுலா மேற்கொள்கிறார். நான் ராகுல் காந்தியிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன், நீங்கள் ஏன் உயிரிழந்த பத்ரிகையாளர் குடுமப்த்தை நேரில் சென்று சந்திக்கவில்லை. காஷ்மீர் சென்று அங்கு கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தை ஏன் பார்க்கவில்லை?” இவ்வாறு அமைச்சர் கிரிராஜ் கேள்வி எழுப்பினார்.

Also Read:  ரூ.100 செலுத்தினால் 1000 ஆபாச வீடியோக்கள்.. டெலிகிராம் மூலம் அரங்கேறிய பிஸினஸ்!

தொடர்ந்து பேசிய அவர், இன்று ஒட்டுமொத்த உலக நாடுகளும் கொரோனா பேரிடர் காலத்தில், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் செயல்பாடு மற்றும் தடுப்பூசி போடும் பணிகளை பாராட்டி வருகின்றன. எனக்கு மிகவும் பெருமையான விஷயம் யாதெனில் , அத்தனை இகழ்ச்சி பேச்சுகளுக்கு மத்தியிலும், மத்திய அரசு நம் நாட்டு மக்களை மட்டும் காப்பாற்றவில்லை, உலகின் பல நாடுகளுக்கும் தடுப்பூசி அனுப்பி வைத்து பிற நாட்டு மக்களையும் காப்பாற்றியிருக்கிறது என்றார்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: