ஹோம் /நியூஸ் /இந்தியா /

பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பயங்கரவாத தாக்குதல் - ராகுல்காந்தி

பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பயங்கரவாத தாக்குதல் - ராகுல்காந்தி

ராகுல்காந்தி

ராகுல்காந்தி

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது ஒரு பயங்கரவாத தாக்குதல் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

  பிரதமர் மோடி, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, பணமதிப்பிழப்பு எனும் பயங்கரவாத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மூன்றாண்டுகள் ஆகிவிட்டதாகவும், இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்ததாகவும் கூறியுள்ளார்.

  பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் லட்சக்கணக்கானோர் வேலையிழக்க நேரிட்டதாகவும், ஆயிரக்கணக்கான சிறுதொழில்கள் நலிந்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

  இந்த கொடூர தாக்குதலை நிகழ்த்தியவர்கள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Demonetisation, Rahul gandhi