முகப்பு /செய்தி /இந்தியா / ராகுல் காந்தி மீண்டும் வெளிநாட்டு பயணம்..

ராகுல் காந்தி மீண்டும் வெளிநாட்டு பயணம்..

Rahul Gandhi

Rahul Gandhi

வரும் ஜனவரி 3ம் தேதி பஞ்சாபின் மோகா பகுதியில் ராகுல் காந்தி பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதாக இருந்தது. தற்போது அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று மீண்டும் வெளிநாட்டிற்கு பயணம் சென்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பயணம் சென்று வருகிறார். ராகுலின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து பாஜக தலைவர்கள் விமர்சித்து வந்த நிலையில், கடந்த மாதம் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்தது தேசிய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் ராகுல் காந்தி தனிப்பட்ட காரணங்களுக்காக நேற்று (டிச 29) வெளிநாட்டுக்கு பயணம் சென்றுள்ளார், பாஜக மற்றும் அவர்களின் மீடியா நண்பர்கள் தேவையில்லாமல் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். ஆனால் ராகுல் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார்? எப்போது திரும்புவார் என்ற தகவல்களை அவர் கூறவில்லை. ராகுல் காந்தி இத்தாலியின் மிலன் நகருக்கு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also read:  செல்பி எடுக்க முயன்ற காங்கிரஸ் தொண்டர்.. செல்போனை தட்டிவிட்டு திட்டித்தீர்த்த டி.கே.சிவக்குமார்..

இன்னும் சில வாரங்களில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட இருக்கும் நிலையில் ராகுல் காந்தியின் இந்த திடீர் வெளிநாட்டு பயணம் காங்கிரஸ் கட்சியினருக்கு பின்னடைவாக மாறியிருக்கிறது. வரும் ஜனவரி 3ம் தேதி பஞ்சாபின் மோகா பகுதியில் ராகுல் காந்தி பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதாக இருந்தது. தற்போது அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ராகுல் காந்தி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அங்கு ஒரு மாதம் இருந்த அவர், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக தாயகம் திரும்பியது குறிப்பிடத்தக்கது. இதே போல மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தலுக்கு முன்னர், ராகுல் காந்தி பாங்காங்கிற்கு சென்றிருந்தார்.

Also read:  மேடையில் நாற்காலிக்காக சண்டை போட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ - வைரலாகும் வீடியோ

top videos

    சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் 5 மாநிலங்களில் பஞ்சாபில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. ஆனால் அங்கு ஆம் ஆத்மியும், பாஜகவும் காங்கிரஸுக்கு பெரும் சவால் அளித்து வரும் நிலையில் ராகுலின் இந்த சுற்றுப்பயணம் பஞ்சாப் காங்கிரஸாருக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் வரும் ஜனவரி 5ம் தேதியன்று பஞ்சாபில் தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பாஜகவுக்காக பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றுக்கொண்ட பின்னர் பஞ்சாபில் பிரதமர் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுவாகும்.

    First published:

    Tags: Congress, Rahul gandhi