மோடியின் பார்ட் டைம் ஜாப் 'பிரதமர் வேலை’ - ராகுல் ட்வீட்

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின் இதுவரை எந்தவொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் பங்கேற்கவில்லை என்றார் ராகுல் காந்தி.

news18
Updated: December 6, 2018, 5:27 PM IST
மோடியின் பார்ட் டைம் ஜாப் 'பிரதமர் வேலை’ - ராகுல் ட்வீட்
ராகுல் காந்தி
news18
Updated: December 6, 2018, 5:27 PM IST
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று 1,654 நாட்கள் ஆகியும், அவர்  இதுவரை பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நாளை (டிச.7) நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில், அவர் இன்று ஹைதராபதில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றுடன் ட்விட்டரில் ராகுல் காந்தி செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது: நரேந்திர மோடி அவர்களே, தற்போது தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்துவிட்டது. இனியாவது உங்களுடைய பகுதி நேர வேலையான பிரதமர் பணியை மேற்கொள்வீர்கள் என நம்புகிறேன்.தாங்கள் பிரதமராக பதவியேற்று 1,654 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் இதுவரை எந்தவொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் தாங்கள் பங்கேற்கவில்லை. இன்று நான் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளேன்.

தாங்களும், இதுபோல் ஒருநாள் முயற்சித்து பார்க்க வேண்டும். அப்போது தங்களிடம் எழுப்பப்படும் கேள்விகள் வேடிக்கையானதாக இருக்கும்’ என்று அந்த பதிவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also watch

First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...