பரிவர்தான் யாத்திரையில் ராகுல் காந்தி! ஹரியானாவில் கை கொடுக்குமா காங்கிரஸ் முயற்சி?

குருக்ராம் மாவட்டத்திலிருந்து மார்ச் 26-ம் தேதி, முன்னாள் மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார், கிரன் சௌத்திரி, நவின் ஜின்டால் உள்ளிட்டத் தலைவர்கள் பங்கேற்புடன் தொடங்கியது.

news18
Updated: March 29, 2019, 6:44 PM IST
பரிவர்தான் யாத்திரையில் ராகுல் காந்தி! ஹரியானாவில் கை கொடுக்குமா காங்கிரஸ் முயற்சி?
ராகுல் காந்தி
news18
Updated: March 29, 2019, 6:44 PM IST
ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பரிவர்தான் யாத்ரையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்ளவுள்ளார்.

மக்களவைத் தேர்தல் தேதி நெருங்கிவரும் நிலையில், நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்மாநிலத்திலுள்ள 10 தொகுதிகளையும் உள்ளடக்கும் வகையில், காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கும் பரிவர்தான் யாத்ரைக்கு ஏற்பாடு செய்தார் குலாம் நபி ஆசாத். குருக்ராம் மாவட்டத்திலிருந்து மார்ச் 26-ம் தேதி, முன்னாள் மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார், கிரன் சௌத்திரி, நவின் ஜின்டால் உள்ளிட்டத் தலைவர்கள் பங்கேற்புடன் தொடங்கியது.

இந்த பரிவர்த்தன் யாத்ரா, மார்ச் 31-ம் தேதி நிறைவடைகிறது. இந்த பரிவர்த்தன் யாத்திரையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்கவுள்ளார். மாநிலத் தலைவர்களுடன் பேரணியில் செல்லவுள்ள ராகுல் காந்தி, ஜகாதாரி, ராடாவுர், லாட்வா, இந்திர, கர்நால் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் முன்னிலையில் பேசவுள்ளார்.

ராகுல் காந்தி பங்கேற்கும் பரிவர்த்தன் யாத்ரா, அம்பாலா, குருக்ஷேத்ரா, கர்னால் ஆகிய மூன்று தொகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். இந்த மூன்று தொகுதிகளிலும் கடந்த பா.ஜ.க வெற்றி பெற்றது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க போட்டியிட்ட 8 தொகுதிகளில், 7 வெற்றி பெற்றது. இந்த தொகுதிகளிலுள்ள ஜாட் இனத்தைச் சாராதவர்களின் வாக்குவங்கியை பா.ஜ.க பெற்றிருந்தது. எனவே, ஹரியானா மாநித்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவது சவாலான விஷயமாக உள்ளது.

Also see:

First published: March 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...