தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி இன்று காணொலி வழி ஆலோசனை..
காங்கிரஸ் கட்சியின் தமிழக நிர்வாகிகளுடன், அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மாலை 4 மணிக்கு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.
- News18 Tamil
- Last Updated: November 30, 2020, 12:06 PM IST
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பிரசாரங்களை தொடங்கியுள்ளன. கட்சியில் அமைப்பு ரீதியிலான மாற்றங்களை செய்து வருகின்றன. திமுக கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சியும் தங்களுடைய வெற்றி வாய்ப்புகள் குறித்து தனியார் அமைப்பு வாயிலாக கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. அதன் அடிப்படையில் கூட்டணி கட்சியான திமுக-விடம் தொகுதி பங்கீடு குறித்து பேச திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தைச் சேர்ந்த கட்சியின் நிர்வாகிகளிடம் இன்று மாலை 4 மணி அளவில் ஆலோசனை நடத்தவுள்ளார்.
Zoom செயலி மூலம் நடைபெறவுள்ள இந்த ஆலோசனையினபோது தேர்தல் வெற்றி வாய்ப்புகள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்துக்களை கேட்டறிவார் என தெரிகிறது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தைச் சேர்ந்த கட்சியின் நிர்வாகிகளிடம் இன்று மாலை 4 மணி அளவில் ஆலோசனை நடத்தவுள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.