Home /News /national /

கட்சியைப் பலப்படுத்த முழுவீச்சில் இறங்கும் ராகுல் காந்தி - மக்களைச் சந்திக்க நாடுதழுவிய பாதயாத்திரை

கட்சியைப் பலப்படுத்த முழுவீச்சில் இறங்கும் ராகுல் காந்தி - மக்களைச் சந்திக்க நாடுதழுவிய பாதயாத்திரை

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

காங்கிரஸ் இனி அவ்வளவுதான், எழும்பாது, காங்கிரஸ் இல்லாத இந்தியா என்றெல்லாம் ஒருபுறம் தீவிர பிரச்சாரத்தின் மூலம் கருத்தொருமித்தலை ஆளும் பாஜக உருவாக்கி வந்தாலும் காங்கிரசை சரிவிலிருந்து மீட்க தீவிரமாக ராகுல் காந்தி களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்கவும் ...
  காங்கிரஸ் இனி அவ்வளவுதான், எழும்பாது, காங்கிரஸ் இல்லாத இந்தியா என்றெல்லாம் ஒருபுறம் தீவிர பிரச்சாரத்தின் மூலம் கருத்தொருமித்தலை ஆளும் பாஜக உருவாக்கி வந்தாலும் காங்கிரசை சரிவிலிருந்து மீட்க தீவிரமாக ராகுல் காந்தி களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  இன்னும் இரண்டே ஆண்டுகளில் நாடு அடுத்த நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. அதை எதிர்கொள்வதற்கும், தொடர் தோல்விகளால் துவண்டு போய் உள்ள கட்சிக்கு புத்துயிரூட்டவும் ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் காங்கிரஸ் 3 நாள் சிந்தனை அமர்வு மாநாட்டினை ‘நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிர்’ என்ற பெயரில் நடத்தி வருகிறது.

  இந்த மாநாட்டில் வானளாவ உயரும் விலைகள், வேலையில்லா திண்டாட்டம், மத்திய அரசின் எதிர்மறைப் பொருளாதாரக் கொள்கைகள் கவனமேற்கொள்ளப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அடுத்த கட்ட போராட்டம் நடத்தி மக்களிடம் எடுத்துச்செல்வதற்கான வழிவகைகள் குறித்து ஆராயும் முக்கிய அமர்வு நடந்தது.

  கட்சியை பலப்படுத்த முழுவீச்சில் களமிறங்குகிறார் ராகுல் காந்தி என்றும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ள ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  இதற்கிடையே காஷ்மீரில் புட்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் அரசு ஊழியர் ராகுல்பட் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து மத்திய அரசை ராகுல்காந்தி கடுமையாக சாடி உள்ளார்.

  இது தொடர்பான வீடியோவை தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல், காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட பற்றி பிரதமர் மோடி பேசுவதை விட, இந்த வீடியோவிற்கு பதில் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

  ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்ற பாதயாத்திரைகள் மாநிலத் தலைவர்களால் மக்கள் சார்பு நிகழ்ச்சி நிரலை முன்வைத்து அரசாங்கத்தின் "தோல்விகள்" மற்றும் மக்களின் அவலங்களை முன்னிலைப்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

  அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பணவீக்கம் மற்றும் பொருளாதாரப் பிரச்னைகள் தொடர்பாக அரசுக்கு எதிராக வெகுஜன போராட்டத் திட்டம் குறித்து விவாதித்தார்.

  இது தொடர்பாக சோனியா காந்தி கூறும்போது, “ராகுல் காந்தியின் பாத யாத்திரை ஒற்றுமையை வலியுறுத்துவதாக இருக்கும், "அதிகபட்ச ஆட்சி, குறைந்தபட்ச அரசு’ என்ற முழக்கத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடியும் அவரது சகாக்களும் உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறார்கள் என்பது இப்போது வேதனையாகத் தெளிவாகிவிட்டது. இதன் பொருள், நாட்டைமத அடிப்படையில் பிரிவினையில் வைத்திருப்பது, மக்களை தொடர்ந்து அச்சம் மற்றும் பாதுகாப்பின்மை நிலையில் வாழ நிர்பந்திப்பது, நமது சமூகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவும், நமது குடியரசின் சம குடிமக்களாகவும் இருக்கும் சிறுபான்மையினரைப் பலிகடாவாக்க மிருகத்தனமாக குறிவைப்பது” என்று சாடினார் சோனியா காந்தி.
  Published by:Muthukumar
  First published:

  Tags: BJP, Rahul gandhi

  அடுத்த செய்தி