லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்தியாவில், அரசியல் தலைவர்களின் செல்போன்களில் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக்கேட்கப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 21-ம் நுற்றாண்டில் கேட்க கற்றுக்கொள்ளுங்கள் (Learning to Listen in the 21st Century) என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், தனது செல்போனில் பெகாசஸ் கருவி மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும் கூறினார். மேலும் அரசியல் தலைவர்களின் போன்களும் ஒட்டுக் கேட்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். புலனாய்வு அதிகாரிகள் தன்னை எச்சரிக்கையாக இருங்கள், உங்களின் போன் ரெக்கார்டு செய்யப்படுவதாகக் கூறினார்கள் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.
Also Read : ஒரே தொகுதியில் போட்டியிட்ட 3 குடும்ப உறுப்பினர்கள்.. மருமகனை தோற்கடித்த அத்தை!
இதனைத்தொடர்ந்து, பாரத் ஜோடோ யாத்திரையில் நடந்த சம்பவங்கள் பற்றியும், அவரின் அனுபவங்கள் பற்றியும் கருத்தரங்கில் பேசியுள்ளார். ராகுலின் இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக நிர்வாகிகள் கண்டம் தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில் பாஜக நிர்வாகி அமித் மாலவியா, 21-ம் நூற்றாண்டில் கற்றுக்கொள்வது என்ற தலைப்பில் ராகுல் காந்தி உரையாற்ற வேண்டும் என்றும், பாஜக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ராகுல் காந்தி பொய் பேசுவதையே பழக்கமாக வைத்துள்ளதாகவும் இந்தியாவைப் பற்றி அவதூறு பரப்புவதாகவும் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rahul Gandhi, University