பள்ளி மாணவியின் சவாலை ஏற்ற ராகுல் காந்தி: ஒரு கையில் புஷ் அப்ஸ் எடுத்து அசத்தல்!

பள்ளி மாணவியின் சவாலை ஏற்ற ராகுல் காந்தி: ஒரு கையில் புஷ் அப்ஸ் எடுத்து அசத்தல்!

கன்னியாகுமரியில் ராகுல் காந்தி

கன்னியாகுமரியில் உள்ள முலகுமுது என்ற சிற்றூரில் உள்ள தூய ஜோசப் உயர்நிலை பள்ளிக்கூடத்தில் பள்ளி மாணவர்களிடையே கலந்துரையாடினார். அப்போது பள்ளி மாணவர் ஒருவரிடம் 'Aikido' தற்காப்புக்கலையை ராகுல் காந்தி செய்து காட்டினார்.

  • Share this:
ராகுல்காந்தியின் கட்டுக்கோப்பான உடல்வாகை வெளிப்படுத்திய புகைப்படம் ஒன்று சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், கன்னியாகுமரியில் பள்ளி மாணவர்களிடையே புஷ் அப் செய்து அசத்தியிருக்கிறார் ராகுல் காந்தி. இது தொடர்பான வீடியோ தற்போது மீண்டும் வைரலாக தொடங்கியுள்ளது.

5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம், கேரளா, புதுவை மாநிலங்களில் தேர்தல் பரப்புரை, கலந்துரையாடல் என பிஸியாக சுழன்று வருகிறார் வயநாடு எம்.பியும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி. சமீபத்தில் புதுவைக்கு வருகை தந்த ராகுல் காந்தி அங்கிருந்து கேரளா சென்ற நிலையில் தற்போது மீண்டும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நெல்லையில் கல்வியாளர்களிடையே கலந்துரையாடிய ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரியில் உள்ள முலகுமுது என்ற சிற்றூரில் உள்ள தூய ஜோசப் உயர்நிலை பள்ளிக்கூடத்தில் பள்ளி மாணவர்களிடையே கலந்துரையாடினார். அப்போது பள்ளி மாணவர் ஒருவரிடம் 'Aikido' தற்காப்புக்கலையை ராகுல் காந்தி செய்து காட்டினார்.அதன் பின்னர் பள்ளி மாணவி ஒருவர் 15 புஷ் அப்களை எடுக்க முடியுமா என்ற சவால் விடுத்தார். அதற்கு நீங்கள் என்னை சங்கடப்பட வைக்கிறீர்கள் என புன்னகையுடன் பதிலளித்த ராகுல் காந்தி உடனடியாக அவரின் சவாலை ஏற்று, அந்த மேடையிலேயே சில நொடிகளுக்குள் 15 புஷ் அப்களை செய்து முடித்தார். இதனால் அங்கு கூடியிருந்த மாணவர்களும், ஆசிரியர்களும் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

மேலும் தொடர்ந்து அந்த மாணவிடம் தற்போது இந்த சவாலை மேலும் கடினமாக்குவோம் என கூறி, ஒரு கையால் புஷ் அப் செய்யலாம் என கூறியதுடன் ஒரு கையில் புஷ் அப் எடுத்து அசத்தினார். இதனால் அங்கிருந்தவர்கள் ஒரு நொடி மிரமித்து போனார்கள்.

ராகுல் காந்தி,


சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் ராகுல்காந்தி மீனவர்களுடன் கடலில் சென்று மீன் பிடித்தார், பின்னர் கடலில் குதித்து நீச்சலடித்து மகிழ்ந்தார். பின்னர் படகில் ஏறிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ராகுலின் ஃபிட்னஸ் வெளிப்பட்டது. சிக்ஸ் பேக் இருப்பது போன்று தெரிந்ததால் பலரும் அவரின் ஃபிட்னஸ் ரகசியத்தை சொல்ல வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் கோரிக்கை வைத்தனர். இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் தற்போது ராகுலின் புஷ் அப்ஸ் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.
Published by:Arun
First published: