‘சவுகிதார் சோர் ஹை’-பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த ராகுல் காந்திக்கு புதிய சிக்கல்

ராகுல் காந்தி

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த போது பிரதமர் நரேந்திர மோடியை ‘சவுகிதார் சோர் ஹை’, அதாவது ‘காவலாளி அல்ல கள்வன்’என்று அவதூறு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அயோத்தி நீதிமன்றம் ராகுல் காந்தி நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த போது பிரதமர் நரேந்திர மோடியை ‘சவுகிதார் சோர் ஹை’, அதாவது ‘காவலாளி அல்ல கள்வன்’என்று அவதூறு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அயோத்தி நீதிமன்றம் ராகுல் காந்தி நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

  சமூக ஆர்வலர் முரளிதர் சதுர்வேதி என்பவர் மேற்கொண்ட புகாரின் அடிப்படையில் அயோத்தி முதல் அமர்வு மாவட்ட நீதிமன்றம் ராகுல் காந்தியை நேரில் ஆஜராக உத்தரவிடுள்லது.

  ரபேல் ஒப்பந்தக் காலக்கட்டத்தின் போது தொடர்ந்து ராகுல் காந்தி மோடி தலைமை மத்திய அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தார். அப்போதுதான் மோடி தன்னை தேசத்தின் காவலாளி என்று, அதாவது சவுகிதார் என்று அழைத்துக் கொண்டார், அதை விமர்சிக்கும் விதமாக ரபேல் ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்து சவுகிதார் அல்ல சோர் அதாவது திருடன் என்று ராகுல் காந்தி கூறியது கடும் கண்டனங்களுக்கு உள்ளானது.

  இது அயோத்தி மக்களை புண்படுத்தி விட்டது என்று சமூக ஆர்வலர் முரளிதர் சதுர்வேதி புகார் எழுப்பி வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து ராகுல் காந்தி நேரில் ஆஜராகி தன் தரப்பு விளக்கத்தைக் கொடுக்க கோர்ட் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.

  சவுகிதார் சோர் ஹை என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கடி 2019 லோக்சபா தேர்தலின் போது முன்னெடுத்தது. ரபேல் ஒப்பந்தத்தில் விமானங்களை அதிக விலை கொடுத்து வாங்குவதன் பின்னணியில் ஊழல் நடந்திருக்கிறது என்று காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

  இதனையடுத்தே சவுகிதார் சோர் ஹை என்ற ஒரு கோஷத்தை தயார் செய்து பிரச்சாரம் செய்தது காங்கிரஸ். இந்நிலையில்தான் ராகுல் காந்தி ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
  Published by:Muthukumar
  First published: