சி.பி.எஸ்.இ தேர்வு நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கோரிக்கை

சி.பி.எஸ்.இ தேர்வு நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கோரிக்கை

ராகுல் காந்தி

கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், சிபிஎஸ்இ தேர்வுகள் நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் மட்டும் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 60,000-த்தை நெருங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவந்தது. இந்தநிலையில், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி மே 4-ம் தேதி தேர்வுகள் தொடங்கும் என்று சி.பி.எஸ்.இ செய்துள்ளது. இது மாணவர்களிடையேயும், பெற்றோரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ட்விட்டர் பதிவில், ‘பேரழிவு தரும் கொரோனா இரண்டாவது அதிகரித்துவரும்போது சி.பி.எஸ்.இ தேர்வுகளை நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும். பெரிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு அனைத்து தரப்பினருடனும் கலந்து ஆலோசிக்கவேண்டும். எத்தனை முறை இந்திய இளைஞர்களின் எதிர்காலத்துடன் மத்திய அரசு விளையாட உள்ளது?’என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


  இதே போல சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்யக்கோரி கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார். இதன் மூலம் எந்த ஒரு தேர்வு மையமாவது ஹாட்ஸ்பாட் ஆக மாறினால் அரசும், சிபிஎஸ்இ வாரியமும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி எச்சரித்துள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: