அசாம் தேர்தல் 2021: தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் மதிய உணவு சாப்பிட்ட ராகுல் காந்தி!

ராகுல் காந்தி

“மிகவும் எளிமையான கைகளே சுவையான உணவை தயாரிக்கின்றன. இங்கு பூபேஷ் பாகெலும், நானும் அருமையான மதிய உணவை அசாமின் திப்ருகரில் உள்ள Chubwa தேயிலை தோட்ட எஸ்டேட் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொண்டோம்” என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.

  • Share this:
அசாமில் தேர்தல் பரப்புரைக்காக இரண்டு நாள் பயணமாக அசாம் சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் ஆகியோர் அங்கு தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் சேர்ந்து தரையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர்.

சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ஒன்றான அசாமில் பாஜக, காங்கிரஸ் என்ற இருமுறை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் பாஜக கூட்டணி அரசை அகற்றி மீண்டும் அசாமில் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் தேர்தல் பரப்புரைகளை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி அசாமி இன்றும், நாளையும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

வடகிழக்கு மாநிலமான அசாமில் தேயிலை தொழில் பிரதானமான ஒன்றாக விளங்குகிறது. தேர்தல் பரப்புரைக்காக அசாம் சென்றுள்ள ராகுல் காந்தி இன்று திப்ருகர் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றினார். இதனையடுத்து அடுத்த நிகழ்ச்சிக்காக புறப்பட்டு செல்லும் வழியில் சுப்வா பகுதியில் தேயிலை எஸ்டேட் ஒன்றுக்கு சென்ற ராகுல் காந்தி தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் ஒன்றாக தரையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். பரப்புரைக்காக ராகுல் காந்தியுடன் அசாம் சென்றிருக்கும் சட்டீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெலும் ராகுல் காந்தியுடன் மதிய உணவை பகிர்ந்து கொண்டார்.

தேயிலை தோட்ட தொழிலாளிகளுடன் மதிய உணவை உட்கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவேற்றியுள்ளார்.

  
View this post on Instagram

 

A post shared by Rahul Gandhi (@rahulgandhi)


“மிகவும் எளிமையான கைகளே சுவையான உணவை தயாரிக்கின்றன. இங்கு பூபேஷ் பாகெலும், நானும் அருமையான மதிய உணவை அசாமின் திப்ருகரில் உள்ள Chubwa தேயிலை தோட்ட எஸ்டேட் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொண்டோம்” என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.முன்னதாக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னர் தமிழகம் வந்த ராகுல் காந்தி, யுடியூப் சேனல் ஒன்றின் சமையல் நிகழ்ச்சியில் சமையல் கலைஞர்களுடன் ஒன்றாக உணவு தயாரித்து, அவர்களுடனே இணைந்து சாப்பிட்டார்.
Published by:Arun
First published: