• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்! ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம்

சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்! ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம்

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ அதிகாரிகள் முயற்சி செய்துவருகின்றனர். பழிவாங்கும் நடவடிக்கையில் பா.ஜ.க ஈடுபடுகிறது என்று காங்கிரஸ், தி.மு.க ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மோடி அரசு அமலாக்கத்துறை, சி.பி.ஐ, முதுகெலும்பில்லாத ஊடகங்களை பயன்படுத்தி ப.சிதம்பரத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு, இன்று மதியம் விசாரணைக்கு வரவுள்ளது.

    ராகுல் காந்தி. (PTI Photo)


    இதற்கிடையில், சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ அதிகாரிகள் முயற்சி செய்துவருகின்றனர். பழிவாங்கும் நடவடிக்கையில் பா.ஜ.க ஈடுபடுகிறது என்று காங்கிரஸ், தி.மு.க ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.

    MK-Stalin | மு.க.ஸ்டாலின்
    மு.க.ஸ்டாலின்


    இந்த விவகாரம் குறித்த ராகுல் காந்தி ட்விட்டர் பதிவில், ‘ப.சிதம்பரத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சி.பி.ஐ, அமலாக்கத்துறை மற்றும் முதுகெலும்பில்லாத ஊடகங்களை மோடி அரசு பயன்படுத்திவருகிறது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அவமானகரமான இந்தச் செயலை நான் கண்டிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், ‘ப.சிதம்பரம் மீது அரசியல் காழ்புணர்வோடு இத்தகைய செயல் நடைபெறுவதாக நான் அறிகிறேன். சிதம்பரம் ஒரு சட்ட வல்லுநர். இதை அவர் சட்டரீதியாக எதிர்கொள்வார்’ என்று தெரிவித்தார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: