Home /News /national /

Exclusive: இந்தியாவின் வரலாறு தெரியாமல் ராகுல் காந்தி பேசி வருகிறார்: அமித் ஷா விமர்சனம்

Exclusive: இந்தியாவின் வரலாறு தெரியாமல் ராகுல் காந்தி பேசி வருகிறார்: அமித் ஷா விமர்சனம்

அமித் ஷா

அமித் ஷா

விவசாயிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, விவசாயிகள் தங்கள் பக்கம் உள்ளதாகவும், வேளாண் சட்டங்கள் அமல்படுத்த எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததைப் போல ஒரு கண்ணோட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இந்தியாவின் வரலாறு தெரியாமல் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பேசி வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.

    உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நியூஸ் 18 தொலைக்காட்சி ஆசிரியர் ராகுல் ஜோஷி பிரத்யேகமாக நேர்காணல் நடத்தினார். அதில் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல், ஹிஜாப் விவகாரங்கள் குறித்து அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார். ஹிஜாப் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அனைத்து மதத்தினரும் பள்ளி சீருடை விதிகளை பின்பற்ற வேண்டும் என்றார். நீதிமன்ற ஆணையை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

    விவசாயிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, விவசாயிகள் தங்கள் பக்கம் உள்ளதாகவும், வேளாண் சட்டங்கள் அமல்படுத்த எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததைப் போல ஒரு கண்ணோட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ராகுல்காந்தி நாட்டின் வரலாறு பற்றியே தெரியாமல் பேசுவதாக கூறிய அமித் ஷா, 1962ம் ஆண்டில் என்ன நடந்தது என்று தெரியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதையும் படிங்க: Exclusive: மோடி மீதான மக்கள் அன்பு அதிகரித்துள்ளது: அமித் ஷா


    சீனாவுடனான சூழல் குறித்து ஏற்கனவே பிரதமர் மோடி பேசிவிட்டதாகவும், ஆனால் ராகுல் காந்தி எந்த நெறிமுறைகளையும் கடைபிடிக்காமல் சீனாவுடன் பேசி வருவதாகவும் சாடினார்.
    கொரோனா பேரிடரில் இருந்து நாடு விடுபட்ட பிறகு , குடியுரிமை சட்டத்திருத்தத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் பின்வாங்குவது குறித்த பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Amit Shah To News 18, BJP, Congress, Election 2022, Rahul gandhi

    அடுத்த செய்தி