திருடர்கள் பெயரெல்லாம் மோடி என்று முடிவது ஏன்? ராகுல் காந்தி கடும் விமர்சனம்

தமிழகத்துக்கு வருகை தந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சேலம், தேனி உள்ளிட்ட நான்கு இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

news18
Updated: April 13, 2019, 6:10 PM IST
திருடர்கள் பெயரெல்லாம் மோடி என்று முடிவது ஏன்? ராகுல் காந்தி கடும் விமர்சனம்
ராகுல் மற்றும் மோடி
news18
Updated: April 13, 2019, 6:10 PM IST
எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்? என்று கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று, தமிழகத்துக்கு வருகை தந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சேலம், தேனி உள்ளிட்ட நான்கு இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இன்று கர்நாடக மாநிலம் கோலாரில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ‘இந்த நாட்டின் காவலாளி என்று தன்னை கூறிக்கொள்ளும் மோடி 100 சதவீதம் திருடன் என்று நான் குற்றம்சாட்டுகிறேன். 30 ஆயிரம் கோடி ரூபாயை திருடி தனது திருட்டு நண்பன் அனில் அம்பானிக்கு அவர் கொடுத்து விட்டார்.

வெறுப்பு அரசியலால் தமிழகத்தை ஆள முடியாது- கிருஷ்ணகிரியில் ராகுல் பிரசாரம்

நீரவ் மோடி, மெகுல் சோக்சி, லலித் மோடி, விஜய் மல்லையா, அனில் அம்பானி, நரேந்திர மோடி என்று ஒரு திருட்டுக் கூட்டமே உருவாகியுள்ளது. என்னிடம் ஒரு கேள்வி உள்ளது. நிரவ் மோடி ஆகட்டும், லலித் மோடி ஆகட்டும், நரேந்திர மோடி ஆகட்டும், எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்? இன்னும் இதைப்போல் எத்தனை மோடி வரப்போகிறார்களோ நமக்கு தெரியாது’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: April 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...