முகப்பு /செய்தி /இந்தியா / ”ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்..” - நாடாளுமன்றத்தை முடக்கிய பாஜக எம்பிகள்!

”ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்..” - நாடாளுமன்றத்தை முடக்கிய பாஜக எம்பிகள்!

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

பாராளுமன்ற கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு இன்று தொடங்கிய நிலையில் இரு அவைகளில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே அமளி ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • New Delhi, India

பாராளுமன்ற கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு இன்று (13.03.2023) தொடங்கியுள்ள நிலையில் மக்களவையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி லண்டனில் இந்தியாவை பற்றிப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பேசினார். அதனைத் தொடர்ந்து, பாஜக மற்றும் காங்கிரஸ் உறுபினர்களால் மக்களவையில் அமளி ஏற்பட்டது.

லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்தியாவின் ஜனநாயகத்தைப் பற்றி பேசியது கண்டிக்கத்தக்கது. அதற்கு அவர் மக்களவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராளுமன்ற மக்களவையில் பேசியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் பியூஷ் கோயலும் , ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் இரண்டு அவைகளிலும் இருகட்சியினருக்கு இடையே அமளி ஏற்பட்டது.

லண்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்தியாவில், அரசியல் தலைவர்களின் செல்போன்களில் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக்கேட்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

Also Read : தன்பாலினத் திருமணத்துக்கு அங்கீகார வழக்கு- 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றம்

இதற்கு , ”வெளிநாட்டு மண்ணில் மூத்த தலைவர் இந்திய ஜனநாயகத்தை அவமானம் படுத்தியது வெட்கக்கேடாக உள்ளது “ என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

First published:

Tags: Parliament, RahulGandhi, Rajnath Singh