நினைவுபடுத்தலா... ரகசிய சேதியா...? சிந்தியா - கமல்நாத் உடன் இருக்கும் படத்தை மீண்டும் பகிர்ந்த ராகுல் காந்தி...!

”18 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து திடீரென பாஜகவில் இணைந்த சிந்தியா, ராகுல் காந்திக்கு நல்ல நண்பனாக இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன”

நினைவுபடுத்தலா... ரகசிய சேதியா...? சிந்தியா - கமல்நாத் உடன் இருக்கும் படத்தை மீண்டும் பகிர்ந்த ராகுல் காந்தி...!
ராகுல் காந்தி
  • News18
  • Last Updated: March 11, 2020, 8:30 PM IST
  • Share this:
சிந்தியா - கமல்நாத் ஆகியோருடன் தான் இருக்கும் பழைய புகைப்படத்தை ராகுல் காந்தி, மீண்டும் ரீ-ட்வீட் செய்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் சில மாநிலங்களில் மத்திய பிரதேசமும் ஒன்று. கடந்த 2018-ம் ஆண்டு இம்மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் அரியணை ஏறியது.

மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் 114 இடங்களையும், பாஜக 109 இடங்களையும் வென்றது. ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை என்ற நிலையில், சுயேச்சைகள், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய எம்.எல்.ஏ.க்களின் உதவியுடன் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. எனினும், மாநில அரசியலில் கோலூன்றி இருக்கும் கமல்நாத் மற்றும் ஜோதிராதிர்தியா சிந்தியா ஆகிய இரு தலைவர்களில் யாருக்கு முதல்வர் வாய்ப்பு என்ற கேள்வி எழுந்தது.


எம்.எல்.ஏ.க்கள் இடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் கமல்நாத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அப்போதைக்கு, காங்கிரஸ் தலைமை சிந்தியாவை சமாளித்தது. ஆனால், 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு படுதோல்வி கிடைக்க, சிந்தியா கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கத் தொடங்கினார்.

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி என்ற வரிகளை அவர் நீக்கியபோது, சிந்தியா அதிருப்தியில் இருக்கிறார் என்று செய்திகள் பறந்தன. அதற்கேற்ப, கமல்நாத்துக்கும், சிந்தியாவுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவிய மோதல் போக்கு முடிவுக்கு வரும் விதமாக, நேற்று காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளிலிருந்து விலகுவதாக சிந்தியா, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பினார்.

அதன் தொடர்ச்சியாக இன்று, பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் ஜோதிர்ராதித்ய சிந்தியா பா.ஜ.க இணைந்தார். கட்சியில் இணைந்த கையோடு சிந்தியாவுக்கு மாநிலங்களவை சீட்டையும் பாஜக ஒதுக்கியுள்ளது. விரைவில் அமைச்சராகவும் ஆக்கப்படுவார் என்று பேச்சுகள் அடிபடுகின்றன.18 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து திடீரென பாஜகவில் இணைந்த சிந்தியா, ராகுல் காந்திக்கு நல்ல நண்பனாக இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. சிந்தியாவின் இந்த திடீர் முடிவு ராகுலை தனிப்பட்ட முறையில் பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மத்தியப்பிரதேசத்தில் யார் முதல்வர்? என்று கமல்நாத் - சிந்தியா இடையே போட்டி நடந்தபோது, இருவரையும் அழைத்து ராகுல் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இருவருடன் இருக்கும் புகைப்படத்தை ராகுல் பதிவிட்டிருந்தார்.



தற்போது, சிந்தியா பாஜகவில் இணைந்துள்ள நிலையில், ராகுல் காந்தி 2018-ல் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை ரீ-ட்வீட் செய்துள்ளார். ராகுலின் இந்த செயல் சிந்தியாவுக்கான செய்தி என்றும் செய்திகள் பறக்கின்றன.




Also Read: வாஜ்பாய் பெற்ற மாபெரும் தோல்விக்கு காரணமானவரின் மகனை வசப்படுத்திய மோடி...!

நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புவாரா கமல்நாத்...? எண்கள் சொல்லும் கணக்கு என்ன...?

கொரோனா அச்சத்தால் ஆம்னி பஸ் கட்டணத்தை விட சரிந்தது விமான கட்டணம்...!

வகுப்பு நண்பர்களின் நலன் கருதி நீண்ட விடுமுறை எடுக்கிறேன்...! காய்ச்சல் & சளி உள்ளதாக மாணவன் விடுப்பு விண்ணப்பம்




சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.



Also see:

First published: March 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading