VIDEO: விமான நிலையத்தில் செல்ல சண்டைபோட்ட ராகுல் காந்தி, பிரியங்கா!

விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அங்கிருந்து புறப்பட்டனர்.

Web Desk | news18
Updated: April 28, 2019, 4:15 PM IST
VIDEO: விமான நிலையத்தில் செல்ல சண்டைபோட்ட ராகுல் காந்தி, பிரியங்கா!
விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அங்கிருந்து புறப்பட்டனர்.
Web Desk | news18
Updated: April 28, 2019, 4:15 PM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தியை கிண்டல் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி இருவரும், தனித்தனியாக கான்பூர் சென்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக கான்பூர் விமான நிலையத்தில் இருவரும் சந்தித்துக்கொண்டனர். விமான நிலையத்தில் பிரியங்கா காந்தியை ராகுல் காந்தி கேலி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கான்பூர் விமான நிலையத்தில் வீடியோ ஒன்றில் பேசும் ராகுல்காந்தி, ‘நல்ல சகோதரர் என்பதற்கான அர்த்தத்தை இப்போது சொல்கிறேன், குறைவான தூரம் பயணிப்பதற்கு கூட பிரியங்காவுக்கு பெரிய ஹெலிகாப்டர்கள் கிடைக்கிறது. ஆனால் அதிக தூரம் பயணிக்கும் எனக்கு சிறிய ஹெலிகாப்டர்களே கிடைக்கிறது’ என்று கூறினார்.

இதைக்கேட்டு பிரியங்கா காந்தி சிரித்துக்கொண்டே, ‘இது உண்மையல்ல’ என்று பதிலளிக்கிறார். இந்த வீடியோவை ராகுல் காந்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த அந்த வீடியோ அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

முன்னதாக, இருவரும் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.



Also watch

First published: April 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...