மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பேச மாட்டேன் - ராகுல் காந்தி வயநாட்டில் பேட்டி

”இந்தியா என்பது ஒன்றே என்ற செய்தியை சொல்வதற்காக இங்கு போட்டியிடுகிறேன்” என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி

news18
Updated: April 4, 2019, 1:39 PM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பேச மாட்டேன் - ராகுல் காந்தி வயநாட்டில் பேட்டி
ராகுல்காந்தி
news18
Updated: April 4, 2019, 1:39 PM IST
“எனக்கு எதிரான எல்லா தாக்குதல்களையும் புன்னகைகளுடன் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களுக்கு எதிரான ஒருவார்த்தையும் பேசமாட்டேன்” என்று ராகுல் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

வயநாடு தொகுதியில் இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், காலை முதலே தொண்டர்கள் அதிகளவில் அங்கு குவிந்தனர்.

மாநில நிர்வாகிகளும் ராகுல் காந்தியை வரவேற்க காத்திருந்தனர். சுமார் 11 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி கல்பெட்டா பகுதிக்கு வந்தடைந்தார்.

அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் வருகை தந்தார்.

பின்னர், ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாக திறந்த வாகனத்தில் வந்து தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
Loading...


கேரளாவின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், மீண்டும் தொண்டர்கள் புடைசூழ ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஊர்வலமாக சென்றனர்.

நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “வயநாட்டில் நான் போட்டியிடுவது குறித்து மோடியோ, யோகியோ என்ன சொன்னாலும் அதனை பொருட்படுத்தப் போவதில்லை. தென்னிந்திய மக்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக கருதுகின்றனர்.

இந்தியா என்பது ஒன்றே என்ற செய்தியை சொல்வதற்காக இங்கு போட்டியிடுகிறேன்” என்றார்.

எதிரணியில் இருக்கும் சிபிஎம்மின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, “எனக்கு எதிரான எல்லா தாக்குதல்களையும் புன்னகைகளுடன் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களுக்கு எதிரான ஒருவார்த்தையும் பேசமாட்டேன்” என்று ராகுல் கூறினார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:
First published: April 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...