• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியில் ராகுல் காந்தி?.. காரிய கமிட்டி கூட்டத்தில் எடுத்த முக்கிய முடிவு!

மீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியில் ராகுல் காந்தி?.. காரிய கமிட்டி கூட்டத்தில் எடுத்த முக்கிய முடிவு!

Rahul Gandhi

Rahul Gandhi

கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த் சர்மா உட்பட 23 பேர் காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டும் என வலியுறுத்தி சோனியாவுக்கு கடிதம் எழுதினர்

  • Share this:
காங்கிரஸ் தலைவராக மீண்டும் நீங்கள் தான் வரவேண்டும் என்று காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் உட்பட மூத்த தலைவர்கள் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

19 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக சோனியா காந்தி இருந்து வந்தார். 2017ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனவர் ராகுல் காந்தி. 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை சந்தித்தது. ராகுல் காந்தி வயநாடு மற்றும் அமேதி ஆகிய இரு இடங்களில் போட்டியிட்டு வயநாட்டில் மட்டும் வெற்றி பெற்று காங்கிரஸின் கோட்டையான அமேதியில் தோல்வி அடைந்தார். இதனிடையே காங்கிரஸ் கட்சியில் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி 2019ல் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார். எத்தனையோ தலைவர்கள் அவரை மீண்டும் தலைவராகவேண்டும் என வற்புறுத்தியும் அவர் உறுதியுடன் தனது முடிவில் இருந்து பின்வாங்காமல் இருந்தார்.

இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி வந்தார். ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியால் சோபிக்க இயலவில்லை. கர்நாடகாவில் ஆட்சியை பறிகொடுத்தது. மேலும் பஞ்சாபில் சமீபத்தில் நடைபெற்ற உள்கட்சி பூசலை கூட காங்கிரஸ் தலைமையால் சரிவர கையாள முடியவில்லை என முனுமுனுக்கப்பட்டது.

Also read: வங்கதேசத்தில் வெடித்த மதக் கலவரம்.. 4 பேர் பலி..

கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த் சர்மா உட்பட 23 பேர் காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டும் என வலியுறுத்தி சோனியாவுக்கு கடிதம் எழுதினர். பின்னர் அவர்கள் கட்சியில் இருந்து ஒரம்கட்டப்பட்டனர்.

இதற்கிடையே இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், சோனியா, ராகுல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Also read:   தோனி குறித்து சுரேஷ் ரெய்னா மனைவி பிரியங்கா வெளியிட்ட ரகசியம்!

அப்போது காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், பல முக்கிய தலைவர்கள் ராகுல் காந்தியிடம் நீங்கள் தான் மீண்டும் தலைவராக வேண்டும் என வற்புறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலளித்த ராகுல், உங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. முன்னர், ராகுல் தனது முடிவில் உறுதியாக இருந்ததாகவும், அவரே தற்போது பரிசீலிப்பதாகவும் கூறியிருப்பதால் ராகுல் காந்தி மீண்டும் தலைவராக வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தினர் தெரிவிக்கின்ற்னார்.

வரும் 2022 செப்டம்பரில் காங்கிரஸ் கட்சியின் உள்கட்சித் தேர்தல் நடத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

Also read:  நிகாங் சீக்கிய குழுவின் பரபரக்கும் பின்னணி! விவசாயிகள் போராட்ட களத்தில் கொடூர கொலைக்கான காரணம் என்ன?

காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, முழு நேர தலைவர் இல்லாத நிலையில் யார் காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள் என ஜி23 தலைவர்களின் கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். “நீங்கள் இவ்வாறு சொல்ல அனுமதித்தால். நான் தான் அந்த முழு நேர தலைவர்.”  என பதிலடி தந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: