முகப்பு /செய்தி /இந்தியா / இந்தி உங்களுக்கு உதவாது... ஆங்கிலம் படியுங்கள்! - ராகுல் காந்தி அட்வைஸ்

இந்தி உங்களுக்கு உதவாது... ஆங்கிலம் படியுங்கள்! - ராகுல் காந்தி அட்வைஸ்

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறி மற்றவர்களுடன் பேச வேண்டும் என்றால், இந்தி மொழி உங்களுக்கு உதவாது என பேச்சு.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Alwar, India

வெளி நாடுகளுக்கு சென்றால் இந்தி உங்களுக்கு உதவாது. எனவே ஆங்கில மொழியை படியுங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பாரத் ஜோடோ யாத்திரையில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராகுல் காந்தி, அல்வர் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், “ஆங்கில மொழியை பள்ளிகளில் கற்பிப்பது பாஜக தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. ஆனால், அவர்களின் பிள்ளைகள் ஆங்கிலம் கற்பிக்கும் பள்ளிகளுக்கு செல்கின்றனர். ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகள் பள்ளிகளுக்கு சென்று ஆங்கிலம் கற்பது பாஜக தலைவர்களுக்கு பிடிக்கவில்லை.

இதையும் படிக்க :  கர்நாடக சட்டப்பேரவையில் சாவர்கர் புகைப்படம் திறப்பு - கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எல்.எல்.ஏ-க்கள்!

நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறி மற்றவர்களுடன் பேச வேண்டும் என்றால், இந்தி மொழி உங்களுக்கு உதவாது. எனவே ஆங்கிலம் படியுங்கள். எங்களுக்கு, இங்கிருக்கும் ஏழைகளின் பிள்ளைகள் அமெரிக்கர்களுடன் போட்டி போட்டு, அவர்களின் மொழியிலேயே வெல்ல வேண்டும். எனவே ஆங்கிலம் படித்து வேறு துறைகளுக்கு செல்லுங்கள். ராஜஸ்தானில் 1700 ஆங்கில வழிக்கல்வி பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.” இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

First published:

Tags: Hindi, Imposing Hindi, Rahul gandhi, RahulGandhi