முகப்பு /செய்தி /இந்தியா / அமைச்சர்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்கிறது... தடுப்பூசி அதிகரிக்கவில்லை - ராகுல் காந்தி

அமைச்சர்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்கிறது... தடுப்பூசி அதிகரிக்கவில்லை - ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

நாள்தோறும் 88 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த 7 நாட்களாக சராசரியாக நாள்தோறும் 34 லட்சம் தடுப்பூசிகள்தான் செலுத்தப்படுகின்றன.

  • Last Updated :

மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்கிறது ஆனால், தடுப்பூசி எண்ணிக்கை அதிகரிக்கவில்லை மாறாக பற்றாக்குறை தான் நீடிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் விமர்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. புதிதாக 43 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இதனை குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “அமைச்சர்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்கிறது, தடுப்பூசி அதிகரிக்கவில்லை, மாறாக பற்றாக்குறை தான் நீடிக்கிறது” எனத் தெரிவித்து, #WhereAreVaccines  (#வேர்ஆர்வேக்சின்ஸ்) என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டுள்ளார். மேலும், தடுப்பூசி குறித்த அட்டவணை ஒன்றையும் ராகுல் பதிவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த அட்டவணையில், “இந்தியாவில், வரும் டிசம்பர் மாதத்துக்குள் 60 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இதற்கு நாள்தோறும் 88 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த 7 நாட்களாக சராசரியாக நாள்தோறும் 34 லட்சம் தடுப்பூசிகள்தான் செலுத்தப்படுகின்றன, ஏறக்குறைய 54 லட்சம் தடுப்பூசிகள் பற்றாக்குறையாக இருக்கின்றன” என குறிப்பிட்டுள்ளார்.

Read More : ஸ்புட்னிக் வி தடுப்பூசி டெல்டா வைரசிடம் இருந்து எந்த அளவிற்கு பாதுகாக்கும் திறன் கொண்டது? - விஞ்ஞானிகள் விளக்கம்

நேற்று வரை நாடு முழுவதும் 37,73,52,501 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 37,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்த பாதிப்பு 3,08,74,376 ஆக உயர்ந்துள்ளது.

Must Read : இந்தியாவை எந்த நேரத்திலும் கொரோனா 3ஆவது அலை தாக்கலாம் - இந்திய மருத்துவர்கள் சங்கம்

top videos

    ஒரேநாளில் 724 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். நோய் பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,08,764 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,00,14,713 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 39,649 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் 4,50,899 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என மத்திய் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Corona Vaccine, Covid-19 vaccine, Rahul gandhi