ரஃபேல் விவகாரம்: உச்ச நீதிமன்றத்திடம் வருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி

பரப்புரைக்காக ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தின் பெயரை உபயோகப்படுத்திய குற்றத்துக்காக ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ரஃபேல் விவகாரம்: உச்ச நீதிமன்றத்திடம் வருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி
ராகுல் காந்தி
  • News18
  • Last Updated: April 22, 2019, 1:06 PM IST
  • Share this:
”ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை உச்ச நீதிமன்றம் ‘திருடன்’ என்று கூறியுள்ளது” எனப் பிரசாரம் செய்ததற்காக உச்ச நீதிமன்றத்திடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பிரசாரத்தின் போது, “ரஃபேல் விவகாரத்தில் சவுகிதார் மோடியை உச்ச நீதிமன்றமே திருடன் என அறிவித்துவிட்டது” எனக் கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

தேவையில்லாமல் பரப்புரைக்காக ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தின் பெயரை உபயோகப்படுத்திய குற்றத்துக்காக ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, “ரஃபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் சொன்னதாக பிரசாரத்தைத் தீவிரப்படுத்தும் நோக்கில் கூறிவிட்டேன். இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என உச்ச நீதிமன்றத்திடம் பதிலளித்துள்ளார்.


மேலும் பார்க்க: இடைத்தேர்தலில் யார் யாருக்கு போட்டியிட வாய்ப்பு? அதிமுக உத்தேச பட்டியல்
First published: April 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading