• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்தியாவை 4 பேர் தான் வழி நடத்துகின்றனர்: ராகுல் காந்தி கொந்தளிப்பு

இந்தியாவை 4 பேர் தான் வழி நடத்துகின்றனர்: ராகுல் காந்தி கொந்தளிப்பு

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

விவசாயிகள் தங்களின் விளை பொருட்களின் விலையை நிர்ணயிக்க, தொழிலதிபர் முன் நிற்க வேண்டும்.

  • Share this:
    இந்தியாவை 4 பேர்தான் வழி நடத்தி வருகின்றனர், அந்த 4 பேருக்காகவே வேளாண் சீர்திருத்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என நாடாளுமன்ற மக்களவையில் ராகுல் காந்தி பேசினார்.

    மக்களவையில் நேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கிப் பேசினார். பிரதமர் கூறிய சில கருத்துக்களுக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

    மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சீர் திருத்த சட்டங்களை எதிர்த்து 2 மாதங்களுக்கு மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட 11 சுற்றுப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்வில்லை.

    இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத்தில் பங்கேற்று பதிலுரையாற்றினார். அப்போது,“வேளாண் துறைக்கு ஊக்கம் அளிப்பதற்காகவே மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.” என்றார்.

    மேலும், “இந்த சட்டத்திற்கு தவறான சாயம் பூசி காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்கிறது. இந்த சட்டங்களை திசைமாற்றம் செய்ய காங்கிரஸ் திட்டம் போடுகிறது. எதிர்க் கட்சிகள் பொய்களை பரப்புகின்றன” என்று குற்றம் சாட்டினார்.

    அப்போது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களை எம்.பி.யுமான ராகுல் காந்தி மத்திய அரசுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மக்களவையில் பேசினார்.

    அவர் பேசுகையில், “நமது நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. ஆனால் விவசாயத்தை அழிக்கும் நோக்கத்திலேயே விவசாயச் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வேளாண் சீர்திருத்த சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை.

    விவசாயிகள் தங்களின் விளை பொருட்களின் விலையை நிர்ணயிக்க, தொழிலதிபர் முன் நிற்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 2ஆவது வேளாண் சட்டம் விளைப் பொருட்கள் பதுக்கலை ஊக்குவிப்பதாக உள்ளது. விளைப் பொருட்கள் நிறுவனங்களின் குடோன்களில் அழுகும் நிலை ஏற்படும்.

    இந்தியாவை 4 பேர் தான் வழி நடத்தி வருகின்றனர், அந்த 4 பேர் யார் என அனைவருக்கும் தெரியும். நாம் இருவர், நமக்கு இருவர் என்பது அரசின் குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரமாக முன்பு இருந்தது.

    மேலும் படிக்க... விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.18,000 வரவு வைக்கப்படும் - மத்திய அமைச்சர் அமித் ஷா

     

    தற்போது அது வேறு வடிவில் உருவெடுத்துள்ளது. இந்த அடிப்படையில் நாட்டை 4 பேர் ஆட்சி செய்கின்றனர். அந்த நான்கு பேருக்காகவே விவசாயச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன” இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: