Home /News /national /

சுழன்று சுழன்று வேலை செய்யும் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக வேண்டும் - சரத் யாதவ் விருப்பம்

சுழன்று சுழன்று வேலை செய்யும் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக வேண்டும் - சரத் யாதவ் விருப்பம்

அரசியல் குறித்து சரத் யாதவ் நிறைய கற்றுத் தந்துள்ளார். நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது என சரத் பவார் கூறுகிறார் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என ராகுல் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியில் சுழன்று சுழன்று வேலைபார்த்து வரும் ராகுல் காந்தி கட்சித் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி டெல்லியில் பீகாரைச் சேர்ந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

    இந்த சந்திப்புக்குப் பின் ராகுல் காந்தி மற்றும் சரத் யாதவ் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது ராகுல் காந்தி, சரத் யாதவை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவரது உடல் நலன் குறித்து விசாரித்தேன். அவர் நலமுடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

    அரசியல் குறித்து சரத் யாதவ் நிறைய கற்றுத் தந்துள்ளார். நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது என சரத் பவார் கூறுகிறார் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். பிரிவினை ஏற்படுத்த மக்களிடம் வெறுப்புணர்வு கட்டவிழ்க்கப்படுகிறது. இதை நாம் ஒற்றுமையுடன் எதிர்கொண்டு சகோதரத்துவத்தை நிலைநாட்ட வேண்டும். இதற்காக நாட்டின் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ராகுல் கூறினார்.

    இதையும் படிங்க - மும்பையை யூனியன் பிரதேசமாக மாற்ற பாஜக சதி: சிவசேனா குற்றச்சாட்டு

    ராகுல் காந்தி சந்திப்பு குறித்து பேசிய சரத் யாதவ், காங்கிரஸ் கட்சியில் சுழன்று சுழன்று வேலைபார்த்து வருபவர் ராகுல் காந்தி. அவரை கட்சியின் தலைவராக்க வேண்டும். அவர் தலைமை பொறுப்பு ஏற்றால்தான் பெரிய காரியங்களை நாம் செய்ய முடியும் என்றார். சரத் பவாரின் இந்த கருத்து தொடர்பாக அருகே நின்ற ராகுல் காந்தியிடம் கேட்ட போது, இதை கவனத்தில் கொள்கிறேன் என்றார்.

    கடந்த மாதம் காங்கிரஸ் கரியக் கமிட்டி கூட்டம் தற்காலிகத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சி பலப்படுத்த அமைப்பு ரீதியான தேர்தல் நடத்த வேண்டும் எனவும் அந்த தேர்தலின் முடிவில், காங்கிரஸ் தலைவருக்கான தேர்வும் நடைபெறும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. அதுவரை சோனியா காந்தியே தலைவர் பதவியில் நீடிப்பார் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

    2017ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். அதன் பின்னர் நடைபெற்ற 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்று காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைமை பதவியை ராஜினாமா செய்தார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Congress, Rahul gandhi

    அடுத்த செய்தி