எப்போது காஷ்மீருக்கு வரவேண்டும்? ஆளுநருக்கு ராகுல் காந்தி கேள்வி

எதிர்கட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகளின் குழுக்களுடன் வருகிறேன். சுதந்திரமாக மக்களைச் சந்திக்க அனுமதிக்கவேண்டும்.

news18
Updated: August 14, 2019, 10:31 PM IST
எப்போது காஷ்மீருக்கு வரவேண்டும்? ஆளுநருக்கு ராகுல் காந்தி கேள்வி
ராகுல் காந்தி
news18
Updated: August 14, 2019, 10:31 PM IST
உங்களுடைய அழைப்பை ஏற்று, எந்த நிபந்தனையும் இல்லாமல் மக்களைச் சந்திக்க காஷ்மீர் வருகிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கும், அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கும் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துவருகிறது. காஷ்மீரில் வன்முறைச் சம்பவங்கள் நிலவுவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில், காஷ்மீருக்கு ராகுல் காந்தி வருகை தரவேண்டும் என்று காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்திருந்தார். அவருக்கு பதிலளித்த ராகுல் காந்தி, ‘எதிர்கட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகளின் குழுக்களுடன் வருகிறேன். சுதந்திரமாக மக்களைச் சந்திக்க அனுமதிக்கவேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த ஆளுநர் சத்யபால் மாலிக், ‘காஷ்மீருக்கு அழைத்தால் முன் நிபந்தனைகள் விதிப்பதா?’ என்று ராகுல் காந்தியை கண்டித்திருந்தார்.

தற்போது ஆளுநருக்கு பதிலளித்த ராகுல் காந்தி ட்விட்டர் பதிவில், ‘அன்புள்ள மாலிக், என்னுடைய ட்விட்டர் பதிவுக்கு உங்களுடைய வலிமையற்ற பதிலைப் பார்த்தேன். ஜம்மு காஷ்மீர் வருவதற்கான உங்களுடைய அழைப்பை ஏற்றுக் கொள்கிறேன். எந்த வித நிபந்தனைகளும் இல்லாமல் மக்களைச் சந்திக்கிறேன். நான் எப்போது வரவேண்டும்?’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:

First published: August 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...