மோடியின் வாக்குறுதிகள் என்னவானது என்பதை யோசித்துக்கொள்ளுங்கள்!- ராகுல் ட்விட்

இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் இல்லை. வங்கிக்கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் இல்லை.

Web Desk | news18
Updated: April 11, 2019, 2:42 PM IST
மோடியின் வாக்குறுதிகள் என்னவானது என்பதை யோசித்துக்கொள்ளுங்கள்!- ராகுல் ட்விட்
ராகுல் காந்தி. (PTI Photo)
Web Desk | news18
Updated: April 11, 2019, 2:42 PM IST
’2014-ம் ஆண்டு தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளே இன்னும் நிறைவேற்றப்படவில்லை’ என்பதை முதற்கட்ட வாக்குப்பதிவு நாளான இன்று நினைவுபடுத்தும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. முதல் நாளான இன்று மக்களுக்கு கடந்த ஆட்சியின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை நினைவுபடுத்தும் வகையில் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

“இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் இல்லை. வங்கிக்கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் இல்லை. பணமதிப்பிழப்பு, வலியில் விவசாயிகள், கப்பர் சிங் வரி, ரஃபேல், பொய்... பொய்... பொய்... நம்பிக்கையின்மை, வன்முறை, வெறுப்பு, பயம். இந்தியாவின் ஆன்மாவுக்காக இன்று வாக்களியுங்கள். இந்தியாவின் எதிர்காலத்துக்காக சிந்தித்து வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் பார்க்க: மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்கு தடை!
First published: April 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...