ராஜினாமா முடிவில் ராகுல்காந்தி பிடிவாதம்; புதிய தலைவரை தேர்வு செய்ய கட்சி தலைமைக்கு கோரிக்கை

காங்கிரஸ் புதிய தலைவர் குறித்து தாமதமின்றி கட்சி மேலிடம் முடிவு செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்

Web Desk | news18
Updated: July 3, 2019, 3:07 PM IST
ராஜினாமா முடிவில் ராகுல்காந்தி பிடிவாதம்; புதிய தலைவரை தேர்வு செய்ய கட்சி தலைமைக்கு கோரிக்கை
ராகுல் காந்தி
Web Desk | news18
Updated: July 3, 2019, 3:07 PM IST
காங்கிரஸ் புதிய தலைவர் குறித்து தாமதமின்றி கட்சி மேலிடம் முடிவு செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு 352 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கூட்டணி அரசு 91 இடங்களில் வெற்றி பெற்றது.

இதையடுத்து மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் ராகுல் காந்தி. ஆனால் ராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்க காங்கிரஸ் காரிய கமிட்டி மறுத்தது.

இந்நிலையில் கட்சி தலைமை புதிய தலைவரை விரைவில் தேர்வு செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும், ‘ தான் ராஜினாமா செய்துவிட்டதால் தன்னால் தலைவராக தொடர்ந்து பணியாற்ற முடியாது என்றும், காலத்தை கடத்தாமல் காங்கிரஸ் காரிய கமிட்டி புதிய தலைவர் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Also Watch

First published: July 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...