நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை சம்மனை ஏற்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி இன்று காலை ஆஜரானார். ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார்.
முன்னதாக ராகுலுக்கு ஆதரவாகவும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் மூத்த தலைவர்களான ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகேல், திக்விஜய சிங், ப சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட், முகுல் வாஸ்னிக், கவ்ரவ் கோகாய், ராஜீவ் சுக்லா ஆகியோர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.
அத்துடன் அமலாக்கத்துத்துறை அலுவலகம் முன் ராகுல் காந்தி சிறிது தூரம் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுடன் இணைந்து சத்தியாகிரக பாதயாத்திரை மேற்கொண்டார். ராகுல் காந்தியுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால், செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பாதயாத்திரையில் ஈடுபட்டனர். பின்னர் அமலாக்கத்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், மத்திய அரசின் கைப்பாவையாக அமலாக்கத்துறை செயல்படுவதாக கூறி நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
इस भू पर लड़ा वही, जो महान है।
तोड़ा उसी ने सत्ता का अभिमान है।।#IndiaWithRahulGandhi pic.twitter.com/YWhFKrnG5J
— Congress (@INCIndia) June 13, 2022
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது கோவிட் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜெஎல்) நாட்டின் சுதந்திரத்துக்கு முன்னரே ஜவஹர்லால் நேரு தொடங்கினார். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். இதன் சார்பில் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாயின. இந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி 90 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளது. இதை திருப்பிச் செலுத்தாத நிலையில், நஷ்டம் காரணமாக 2008-ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, 2010-ம் ஆண்டு இந்நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்துக்கு யங்இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கு ஏஜேஎல் நிறுவன பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறவில்லை.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் தேர்தல்.. திசைக்கொரு பக்கமாய் எதிர்க்கட்சிகள்
இந்நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் வசமும் 24 சதவீத பங்குகள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் வசமும் வந்தன. 2016 முதல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீண்டும் வெளியாகிறது. இதனிடையே, 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி அமலாக்கப் பிரிவு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Enforcement Directorate, National herald, Rahul gandhi