பி.எம் கேருக்கு நிதி வழங்கியவர்கள் விவரங்களை வெளியிட பிரதமர் பயப்படுவது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

பி.எம் கேருக்கு நிதி வழங்கியவர்கள் விவரங்களை வெளியிட பிரதமர் பயப்படுவது ஏன்? ராகுல் காந்தி கேள்வி
ராகுல் காந்தி
  • Share this:
பி.எம். கேருக்கு நிவாரண நிதி வழங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதற்கு பிரதமர் மோடி ஏன் பயப்படுகிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக இந்தியா மிகப் பெரிய அளவில் பொருளாதாரப் பாதிப்பை சந்தித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு நிவாரணம் திரட்டும் வகையில் பி.எம். கேர் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதன்கீழ் கொரோனா நிவாரண நிதி திரட்டப்பட்டது. ஏற்கெனவே பிரதமர் நிவாரண நிதி இருக்கும் நிலையில், பி.எம் கேர் எதற்காக என்று ஆரம்பம் முதலே எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பிவந்தன. மேலும், பி.எம் கேர் செயல்படும் முறை குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்தநிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுவில் காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, ‘பி.எம் கேருக்கு நிதி வழங்கியவர்கள் குறித்த விவரங்களைக் கேட்டார். ஆனால், பா.ஜ.க உறுப்பினர்கள் பி.எம் கேர் அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் விவரங்களை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்த ராகுல் காந்தி ட்விட்டர் பதிவில், ‘பி.எம். கேருக்கு யாரெல்லாம் நிதி வழங்கினார்கள் என்ற விவரத்தை வெளியிடுவதற்கு பிரதமர் மோடி ஏன் பயப்படுகிறார்? சீன நிறுவனங்களான ஹூவாய், ஜியோமி, டிக்டாக், ஒன்ப்ளஸ் ஆகிய நிறுவனங்கள் பணம் வழங்கியுள்ளன என்று அனைவருக்கும் தெரியும். எதற்காக அவர் தகவல்களை வெளியிட மறுக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
First published: July 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading