இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் நுழையவில்லை என்பதை உறுதி செய்யமுடியுமா? மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி

இந்திய எல்லைக்குள் எந்த சீனா ராணுவ வீரர்களும் நுழையவில்லை என்பதை இந்திய அரசு உறுதி செய்ய முடியுமா என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் நுழையவில்லை என்பதை உறுதி செய்யமுடியுமா? மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி
ராகுல் காந்தி
  • Share this:
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லை பிரச்னை நீண்டகாலமாக நீடித்து வருகிறது. லடாக் எல்லை பகுதியில் அத்துமீறி சீன ராணுவத்தினர் நுழைய முயற்சிப்பதும், அவர்களை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்துவதும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் பாங்கோங் ஏரி அருகே அத்துமீறி நுழைய சீன வீரர்கள் முயன்றதால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனிடையே எல்லைப்பகுதியில் சீன ராணுவத்தின் விமானப்படைத்தளம் விரிவுபடுத்தப்படுவதும், போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்படுவதும் செயற்கைக்கோள் படங்கள் மூலமாக தெரியவந்தன.

இந்திய- சீன இடையேயான எல்லை மோதல் போக்கு கடந்த 25 நாட்களுக்கு மேலாக நீடிக்கின்றன. இதைதொடர்ந்து பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. சமரச முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வருகிறது. இந்நிலையில் பணிகளில் ஈடுபடுத்தப்படாமல் தயார் நிலையில் இருந்த படைகளை, எல்லைப்பகுதிக்கு இந்தியா அனுப்பி வைத்தது.


பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தநிலையில், ஜூன் 6-ம் தேதி இருநாட்டு ராணுவத்தின் லெப்டினன்ட் ஜென்ரல் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்தநிலையில், இந்திய எல்லைப் பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் நுழையவில்லை என்பதை இந்திய அரசால் உறுதி செய்யமுடியுமா?’ என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Also see:
First published: June 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading